தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தமது பிரச்சினைகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும், இதுவரை எவ்வித தீர்வுகளும் எட்டப்படவில்லை என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அதன்படி, இன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நாடுதழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமது கோரிக்கைகள் தொடர்பில் பிரதி நிதியமைச்சருடன் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலின் முடிவுகளைப் பொறுத்து, மேலதிக தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என சுங்க தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கறுப்புப் பட்டி அணிந்து கடமைகளில் ஈடுபடும் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் கீதாஞ்சன மடபாத குறிப்பிட்டுள்ளார்.


