இரண்டாம் பாதியுடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இச்சுட்டெண் 10.6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்த வளர்ச்சியானது காணி மதிப்பீட்டுச் சுட்டெண்ணின் துணைச் சுட்டெண்களான குடியிருப்பு, வர்த்தகம் மற்றும் கைத்தொழில் ஆகிய மூன்று துறைகளிலும் பிரதிபலிக்கின்றது. இவை முறையே 12.4%, 11.3% மற்றும் 8.0% வருடாந்த உயர்வைப் பதிவு செய்துள்ளன.
இதேவேளை, 2025ஆம் ஆண்டின் முதலாம் பாதியுடன் ஒப்பிடுகையில், 2025இன் இரண்டாம் பாதியில் காணி மதிப்பீட்டுச் சுட்டெண் மற்றும் அதன் துணைச் சுட்டெண்கள் அரை வருடாந்த அடிப்படையில் மிதமான வளர்ச்சியை எட்டியுள்ளன. இதில் வர்த்தக மற்றும் குடியிருப்பு சார் துணைச் சுட்டெண்கள் அதிக வளர்ச்சி வேகத்தைக் காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


