Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

சிறீதரன் எம்.பி தொடர்பில் தமிழரசுக் கட்சி முக்கிய தீர்மானம்!

T

The Leader Desk

ஜனவரி 26, 2026 • 4:35 AM

சிறீதரன் எம்.பி தொடர்பில் தமிழரசுக் கட்சி முக்கிய தீர்மானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காரணத்தால், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியை அவரிடமிருந்து மீளப் பெற கட்சி தீர்மானித்துள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
  • நேற்று திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்தில் இவை பற்றி ஆராயப்பட்டன.
  • மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
எழுத்து அளவு:

காரணத்தால், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியை அவரிடமிருந்து மீளப் பெற கட்சி தீர்மானித்துள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது கருத்துத் தெரிவித்த சுமந்திரன் இவ்விடயம் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

"சிறீதரனுக்கு நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியானது தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவினாலேயே வழங்கப்பட்டது. தேர்தல் முடிந்த பின்னர் வவுனியாவில் அரசியல் குழுவின் கூட்டத்தில் அந்த நேரத்தில் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டார்.

அந்த நேரத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்துக்கு வழங்குவதற்கும் அந்த அரசியல் குழுக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டது.

அதேபோன்று நாடாளுமன்றத்தில் கொறடா பதவியை வைத்தியர் சத்தியலிங்கத்துக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டதுடன் நாடாளுமன்ற நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனையும் நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

நாடாளுமன்ற குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை நாங்கள் நியமித்தோம். நேற்று திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்தில் இவை பற்றி ஆராயப்பட்டன.

அரசியல் குழுவினால் நியமிக்கப்பட்ட நியமனங்களை மாற்றுவதற்கான அதிகாரம் அரசியல் குழுவுக்கே இருக்கின்றது. எந்தக் குழு நியமித்ததோ அதனை மாற்றுவதற்கு அதிகாரம் அந்தக் குழுவுக்கு உண்டு.

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்ததன் காரணத்தால் அரசியல் குழுவினால் வழங்கப்பட்ட நியமனத்தை மீளப்பெறுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

அரசியல் குழு அவர் மீது நம்பிக்கை வைத்து ஏகமனதாக நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியை அவருக்கு வழங்கியது. அதே அரசியல் குழு இரண்டு தடவைகள் அவர் அரசமைப்புக் கவுன்ஸிலிலிருந்து இராஜிநாமாச் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை ஏகமனதாக வழங்கியிருந்தது. நேற்றைய தினம் சுமார் நான்கு மணி நேரம் அதே கருத்தை அவரிடம் வலியுறுத்தியிருந்தோம்.

ஆகவே கட்சியின் எந்த உயர் குழு அவருக்கு அந்தப் பதவியை வழங்கியதோ, அந்தக் குழுவின் ஆலோசனையையும் வற்புறுத்தலையும் அவர் செவிமடுக்கவில்லையென்றால் அந்தப் பதவியை அவரிடமிருந்து எடுப்பது எனத் தீர்மானித்தோம்." - என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...