Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

26 புதிய பஸ்கள் நுவரெலியாவுக்கு கையளிப்பு

T

The Leader Desk

ஏப்ரல் 9, 2023 • 11:15 PM

26 புதிய பஸ்கள் நுவரெலியாவுக்கு கையளிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பஸ்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (09) போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நுவரெலியா கிரகரி வாவி பகுதியில் இடம்பெற்றது.
  • நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள ஏழு டிப்போக்களுக்கு 26 புதிய பஸ்கள் இதன்போது கையளிக்கப்பட்டன.
  • இந்த புதிய பஸ்கள் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன், நுவரெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குராங்கெத்த மற்றும் கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி மற்றும் கம்பளை ஆகிய டிப்போக்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பஸ்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (09) போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நுவரெலியா கிரகரி வாவி பகுதியில் இடம்பெற்றது.

நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள ஏழு டிப்போக்களுக்கு 26 புதிய பஸ்கள் இதன்போது கையளிக்கப்பட்டன. மேலும் இந்த புதிய பஸ்களை தோட்ட மற்றும் கிராமப்புற வீதிகளில் பயணிக்கவும், அதன் மூலம் கிராமப்புற மற்றும் தோட்டப்புற மக்களுக்கு முறையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

இந்த புதிய பஸ்கள் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன், நுவரெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குராங்கெத்த மற்றும் கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி மற்றும் கம்பளை ஆகிய டிப்போக்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது, நுவரெலியா மாவட்ட பாடாளுமன்ற உறுப்பினர்களான சி. பி. ரத்நாயக்க, எஸ். பி. திசாநாயக்க, மருதப்பாண்டி ரமேஸ்வரன் மற்றும் டிப்போ அத்தியட்சகர்கள், டிப்போ ஊழியர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

26 புதிய பஸ்கள் நுவரெலியாவுக்கு கையளிப்பு | Tamil Leader | We Lead the Nation