உள்ளதாகப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சபையின் விளக்கம்:
"பேராயர்கள் தொடர்பான முடிவுகள் வத்திக்கானினால் (Vatican) எடுக்கப்படுகின்றன. கத்தோலிக்க திருச்சபையின் நடைமுறைப்படி, ஒரு கர்தினால் 80 வயதை எட்டும்போது ஓய்வு பெற வேண்டும் என்ற விதி இருந்தாலும், அது குறித்த இறுதி முடிவை திருத்தந்தையே (Pope) எடுப்பார்"
என்று அருட்தந்தை கிரிஷாந்த கூறினார்.
"கர்தினால் ரஞ்சித் அவர்கள் அடுத்த வருடம் 80 வயதை எட்டுவார் என்ற போதிலும், அவரது ஓய்வு குறித்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை"
என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


