Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் காற்று மாசடைவதைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு!

T

The Leader Desk

மார்ச் 25, 2026 • 5:23 AM

யாழ்ப்பாணத்தில் காற்று மாசடைவதைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மற்றும் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்றை யாழ்ப்பாண மாநகர சபை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
  • வழக்கின் பின்னணி மற்றும் நீதிமன்ற உத்தரவு: நீதிமன்ற அமர்வு: மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று (24) இந்த மனு விசாரணைக்கு வந்தது.
  • தேசியத் தேவை: இதனை ஒரு தேசியத் தேவையாகக் கருதிச் செயற்படுத்துமாறு அறிவுறுத்திய நீதியரசர்கள் குழாம், இதன் முன்னேற்ற அறிக்கையை ஜூலை மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டது.
எழுத்து அளவு:

மற்றும் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்றை யாழ்ப்பாண மாநகர சபை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

வைத்தியர் உமாசுகி நடராஜா அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

வழக்கின் பின்னணி மற்றும் நீதிமன்ற உத்தரவு:

  • நீதிமன்ற அமர்வு: மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று (24) இந்த மனு விசாரணைக்கு வந்தது.

  • கூட்டு நடவடிக்கை: சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் யாழ் மாநகர சபைக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு உத்தரவிட்டது.

  • தேசியத் தேவை: இதனை ஒரு தேசியத் தேவையாகக் கருதிச் செயற்படுத்துமாறு அறிவுறுத்திய நீதியரசர்கள் குழாம், இதன் முன்னேற்ற அறிக்கையை ஜூலை மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டது.

மனுதாரரின் குற்றச்சாட்டு:

சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், யாழ்ப்பாண மாநகர சபை திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு முறையான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகக் கழிவுகள் எரிக்கப்படுவதால் அப்பகுதியில் பாரிய காற்று மாசடைவு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைக் கருத்திற் கொண்டே, யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசடைவதைக் குறைக்க முறையான வேலைத்திட்டமொன்றை வகுக்குமாறு யாழ் மாநகர சபை உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

யாழ்ப்பாணத்தில் காற்று மாசடைவதைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு! | Tamil Leader | We Lead the Nation