Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: அமெரிக்கா தனது இராணுவப் பலத்தை பாரியளவில் அதிகரிப்பு

T

The Leader Desk

பிப்ரவரி 25, 2026 • 2:41 PM

மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: அமெரிக்கா தனது இராணுவப் பலத்தை பாரியளவில் அதிகரிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • Ford) நேற்று (24) கிரேக்கத்தின் கிரீட் தீவிலுள்ள துறைமுகத்தை வந்தடைந்தது.
  • ஃபோர்ட் போர்க்கப்பல் ஜிப்ரால்டர் நீரிணையைக் கடந்து கிரேக்கத்தின் கிரீட் தீவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
  • விமானங்களுக்கான எரிபொருள் விநியோகம்: போர்த்துக்கல்லின் கட்டுப்பாட்டிலுள்ள அசோரஸ் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள லெசஸ் (Lajes) விமானத் தளத்தில், போர் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் அமெரிக்காவின் விசேட எண்ணெய் தாங்கி விமானங்கள் கடந்த 23ஆம் திகதி நிலைகொண்டிருந்தன.
  • ஐரோப்பிய தளங்களில் குவிப்பு: கடந்த 20 ஆம் திகதி பிரித்தானியாவின் ராயல் விமானப்படைக்குச் சொந்தமான மில்டன்ஹால் (Mildenhall) தளத்திற்கும், 19 ஆம் திகதி பல்கேரியாவின் சோபியா சர்வதேச விமான நிலையத்திற்கும் அமெரிக்கப் போர் விமானங்கள் பெருமளவில் வந்து சேர்ந்துள்ளன.
எழுத்து அளவு:

யு.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர். ஃபோர்ட் (USS Gerald R. Ford) நேற்று (24) கிரேக்கத்தின் கிரீட் தீவிலுள்ள துறைமுகத்தை வந்தடைந்தது. மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கிப் பயணிக்கும் வழியில், கப்பலின் சுகாதார வசதிகளைப் புனரமைப்பதற்காகவே அது அங்கு நங்கூரமிட்டதாக சமூக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தயாராகி வரும் அமெரிக்கப் படைகளின் அண்மைக்கால நகர்வுகள் தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வௌியாகியுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரத்தை மிகத் தீவிரமாக நிலைநிறுத்தி வருவதை இந்தப் புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன.

2003 ஆம் ஆண்டு ஈராக் போருக்காக அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கில் குவிக்கப்பட்டதன் பின்னர், இதுவரை இல்லாத வகையில் மிகப்பாரிய இராணுவக் குவிப்பு இடம்பெறும் முதல் சந்தர்ப்பம் இதுவெனக் கருதப்படுகிறது.

இராணுவ நகர்வுகள் குறித்த முக்கிய விபரங்கள்:

ME_1.jpg

ஜிப்ரால்டர் நீரிணை ஊடாகப் பயணம்: யு.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர். ஃபோர்ட் போர்க்கப்பல் ஜிப்ரால்டர் நீரிணையைக் கடந்து கிரேக்கத்தின் கிரீட் தீவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

ME_3.jpg

விமானங்களுக்கான எரிபொருள் விநியோகம்: போர்த்துக்கல்லின் கட்டுப்பாட்டிலுள்ள அசோரஸ் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள லெசஸ் (Lajes) விமானத் தளத்தில், போர் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் அமெரிக்காவின் விசேட எண்ணெய் தாங்கி விமானங்கள் கடந்த 23ஆம் திகதி நிலைகொண்டிருந்தன.

ME_4.jpg

விமானத் தள அனுமதி: லெசஸ் விமானத் தளத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு தமது அரசாங்கத்தின் விசேட அனுமதி தேவையில்லை என போர்த்துக்கல் அரசு அறிவித்துள்ளது.

ME_5.jpg

ஐரோப்பிய தளங்களில் குவிப்பு: கடந்த 20 ஆம் திகதி பிரித்தானியாவின் ராயல் விமானப்படைக்குச் சொந்தமான மில்டன்ஹால் (Mildenhall) தளத்திற்கும், 19 ஆம் திகதி பல்கேரியாவின் சோபியா சர்வதேச விமான நிலையத்திற்கும் அமெரிக்கப் போர் விமானங்கள் பெருமளவில் வந்து சேர்ந்துள்ளன.

ME_6.jpg

ME_7.jpg

அரபிக்கடல் கண்காணிப்பு: அரபிக்கடலில் பயணிக்கும் அமெரிக்கத் தாக்குதல் கப்பல்களுக்குத் தேவையான எரிபொருளை விநியோகிக்கும் விசேட போர்க்கப்பல்கள் கடந்த 18 ஆம் திகதி அப்பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

ME_8.jpg

ஈரான் - ரஷ்யா கூட்டுப் பயிற்சி:
மறுபுறம், ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே அண்மையில் இடம்பெற்ற கூட்டு இராணுவப் பயிற்சி தொடர்பான புகைப்படங்களும் வௌியாகியுள்ளன. கடந்த 17 ஆம் திகதி தெற்கு ஈரான் கடற்பரப்பில் பயணித்த ஈரானியக் கப்பலொன்றிலிருந்து ஏவுகணை ஏவப்படும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...