Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

'புதிய வரி விதிப்புகளுக்கு ஒப்புதல் தேவையில்லை': அமெரிக்காவில் புரட்சியை அறிவித்த ட்ரம்ப்

T

The Leader Desk

பிப்ரவரி 25, 2026 • 6:13 AM

'புதிய வரி விதிப்புகளுக்கு ஒப்புதல் தேவையில்லை': அமெரிக்காவில் புரட்சியை அறிவித்த ட்ரம்ப்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொருளாதார கட்டமைப்பையே மாற்றியமைக்கும் ஒரு அதிரடித் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
  • அமெரிக்க எல்லைகள் தற்போது மிகவும் பாதுகாப்பாக உள்ளது.
  • 'கடந்த ஓராண்டில் நான் 8 போர்களை தடுத்து நிறுத்தியுள்ளேன்.
எழுத்து அளவு:

பொருளாதார கட்டமைப்பையே மாற்றியமைக்கும் ஒரு அதிரடித் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

தற்போதைய வருமான வரி முறையை ஒழித்துவிட்டு, அதற்கு பதிலாக வெளிநாடுகள் செலுத்தும் இறக்குமதி வரிகளை கொண்டு அரசு நிர்வாகத்தை நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை "மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று குறிப்பிட்ட ட்ரம்ப், இந்த தீர்ப்பு தனது கரங்களை வலுப்படுத்தியுள்ளதாக கூறினார்.

புதிய சட்டப்பிரிவுகளின் கீழ் தான் விதிக்கப்போகும் வரிகள், முந்தைய வரிகளை விட "மிகவும் மோசமானதாக" இருக்கும் என்பதை உலக நாடுகள் உணர்ந்துள்ளதால், அவை ஏற்கனவே செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தங்களை தொடர விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

"வெளிநாடுகள் செலுத்தும் இறக்குமதி வரிகள், எதிர்காலத்தில் அமெரிக்க மக்களின் வருமான வரிச் சுமையை முழுமையாக நீக்கும். இது ஒரு காலத்தில் வெற்றிகரமாக இருந்த முறை, மீண்டும் அதை அமல்படுத்துவேன்," என்று ட்ரம்ப் முழங்கினார்.

மற்ற நாடுகள் அமெரிக்காவை நீண்டகாலமாக ஏமாற்றி வந்ததாகவும், தற்போது அந்த நாடுகள் சரியான வர்த்தக உடன்படிக்கைக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தன்னுடைய இறக்குமதி வரி மிரட்டல்தான் பல சர்வதேச போர்களை தடுத்து நிறுத்தி அமைதியை கொண்டு வந்துள்ளதாக ட்ரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

புதிய வரி விதிப்புகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களே போதுமானது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

'ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு காலத்திலேயே, யாரும் பார்த்திடாத ஒரு மாற்றத்தை நாம் அடைந்துள்ளோம் என்று என்னால் பெருமையுடன் கூற முடியும். உண்மையிலேயே இது ஒரு யுகத்திற்கான திருப்பம்' என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து டிரம்ப் பேசியதாவது;

"அமெரிக்கப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுப்பெற்று வருகிறது. அமெரிக்க எல்லைகள் தற்போது மிகவும் பாதுகாப்பாக உள்ளது. அமெரிக்காவின் எதிரிகள் பீதியில் இருக்கின்றனர். அமெரிக்க ராணுவமும், போலீசாரும், முன்னெப்போதும் இல்லாததை விட மிகவும் வலிமை பெற்றுள்ளன. உலக அரங்கில் அமெரிக்காவுக்கு மீண்டும் மரியாதையை கிடைத்துள்ளது.

"நான் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று, வெள்ளை மாளிகைக்கு வந்தபோது, நாடு இக்கட்டான சூழலில் இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளேன். ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு காலத்திலேயே, யாரும் பார்த்திடாத ஒரு மாற்றத்தை நாம் அடைந்துள்ளோம் என்று என்னால் பெருமையுடன் கூற முடியும். உண்மையிலேயே இது ஒரு யுகத்திற்கான திருப்பம்.

“ஓராண்டுக்கு முன்பு தான் பதவியேற்றபோது இருந்த பொருளாதார தேக்கநிலை, பணவீக்கம் மற்றும் எல்லைப் பிரச்னைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அமெரிக்கா இன்னும் சிறப்பாகவும், மேன்மையாகவும் செயல்படப் போகிறது. இது அமெரிக்காவின் பொற்காலம்" என்று அவர் கூறினார்.

'கடந்த ஓராண்டில் நான் 8 போர்களை தடுத்து நிறுத்தியுள்ளேன். இந்தியா பாகிஸ்தான் போரை நான் தடுத்து நிறுத்தி இருக்காவிட்டால், மூன்றரை கோடி பேர் பலியாகி இருப்பர் என்று பாகிஸ்தான் பிரதமர் என்னிடம் கூறினார்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...