அரசாங்கம் இன்று (25) உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜப்பானின் பிரதி பிரதம அமைச்சரவைச் செயலாளர் மசானாவோ ஒசாகி (Masanao Ozaki), கடந்த ஜனவரி 20ஆம் திகதி குறித்த ஜப்பானியப் பிரஜை ஈரான் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக இது குறித்த மேலதிக விபரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள 'ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா' (Radio Free Europe) வானொலி சேவை, ஈரானியக் காவலில் இருப்பவர் ஜப்பானின் புகழ்பெற்ற NHK தொலைக்காட்சியின் தெஹ்ரான் பணியகத் தலைவர் ஷினோசுகே கவாஷிமா (Shinnosuke Kawashima) என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
ஈரான் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்ட கவாஷிமா, தற்போது தெஹ்ரானில் உள்ள சிறைச்சாலை ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது ஊழியர் ஒருவர் ஈரானியக் காவலில் இருப்பதை NHK தொலைக்காட்சி நிறுவனம் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. தமது ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதால், இந்தத் தருணத்தில் இது குறித்து எவ்விதக் கருத்துக்களையும் வெளியிட முடியாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக சுமுகமான இராஜதந்திர உறவுகள் நிலவி வரும் நிலையில், ஒரு முக்கிய ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளமை சர்வதேச மட்டத்தில் உற்றுநோக்கப்படுகிறது.


