பிரித்தானியாவின் முதலாவது குழந்தை பிறந்துள்ளமை மருத்துவ உலகில் பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.
பிரித்தானியாவைச் சேர்ந்த 30 வயதான கிரேஸ் பெல் (Grace Bell) என்ற பெண்ணே இந்த அற்புதத் தாய்ப்பேற்றைப் பெற்றுள்ளார்.
'ஹியூகோ பவல்' (Hugo Powell) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆண் குழந்தை, கடந்த டிசம்பர் மாதம் லண்டனில் உள்ள 'குவீன் சார்லட் மற்றும் செ Chelsea' மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளது. பிறக்கும் போது இக்குழந்தை 3.1 கிலோகிராம் எடையுடன் ஆரோக்கியமாக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தையின் தாயான கிரேஸ் பெல், பிறக்கும் போதே கருப்பை இல்லாத 'Mayer-Rokitansky-Kuster-Hauser' எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். தனது இளம் வயதிலேயே தம்மால் ஒருபோதும் தாயாக முடியாது என்பதை அறிந்த போது, மருத்துவமனை கழிவறைக்குள் அழுது துடித்ததாக அவர் மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வரலாற்றுச் சாதனை குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்:
"இது ஒரு அதிசயம். இது சாத்தியமாகும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள் இதுவே" எனத் தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்தக் குழந்தைப் பிறப்பிற்கான கருப்பையை வழங்கியவர் மறைந்த ஒரு இளம்பெண்ணாவார். அவரது கருப்பை மாத்திரமன்றி, இதயம் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட மேலும் 5 உறுப்புகள் நான்கு நபர்களுக்குப் பொருத்தப்பட்டு அவர்களின் உயிர்களும் காப்பாற்றப்பட்டுள்ளன.
தனக்குத் தாய்மையைப் பரிசளித்த அந்த இனந்தெரியாத கொடையாளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கிரேஸ் பெல் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்:
"தனது மகளை இழந்த துயரத்திலும் அந்தத் தந்தை செய்த இந்த உன்னதத் தியாகத்தால், எனது வாழ்நாள் கனவு நனவாகியுள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் உயிரிழந்த ஒருவரின் கருப்பை மூலம் குழந்தை பிறந்த மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். பிரித்தானியாவில் இதற்கு முன்னர் உயிருடன் இருந்த ஒருவரின் (சகோதரி) கருப்பையைப் பொருத்தி குழந்தை பிறந்திருந்த போதிலும், உயிரிழந்த ஒருவரின் கருப்பை மூலம் குழந்தை பிறந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவெனக் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் வாடகைத் தாய் (Surrogacy) முறை மூலம் குழந்தையைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருந்த கிரேஸ் பெல், பின்னர் பிரித்தானியாவின் கருப்பை மாற்று அறுவை சிகிச்சைத் திட்டத்தில் இணைந்து இந்த உன்னதப் பேற்றைப் பெற்றுள்ளார்.


