பிரிவின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இன்று (பெப்ரவரி 25) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
பேயலியகொட பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதி: 2019 ஏப்ரல் 21 அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற போது, அப்போதைய பிரிகேடியராக இருந்த சுரேஷ் சலே, மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் ஆலோசகராகப் பணியாற்றி வந்தார்.
அதற்கு முன்னதாக அவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றியிருந்தார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் சுரேஷ் சலேவுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நீண்டகாலமாகப் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது இந்த அதிரடிக் கைது இடம்பெற்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்கும் நோக்கில் தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள் விசாரணைகளின் ஒரு கட்டமாகவே இந்தக் கைது நடவடிக்கை பார்க்கப்படுகின்றது.


