யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தனது வளர்ப்பு மாடுகளுக்குத் தேவையான புற்களை வெட்டிக்கொண்டிருந்த போதே, அங்கு வந்த காட்டு யானை இவரைத் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் வூனாவக்காடு (Vunavakkadu) பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது பிரேத பரிசோதனைகளுக்காக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் மரண அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


