பெற்றுக்கொள்ளக்கூடிய புதிய முறையொன்றை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு (COPF) மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்த போதே இந்தத் தகவல் வௌியானது.
மாகாண அடையாளங்கள் நீக்கம்: நிதிக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இதற்கு முன்னர் வாகன இலக்கத் தகடுகளில் மாகாண அடையாளங்கள் (Provincial Indicators) காணப்பட்டதாகவும், அவை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் பிரியந்த திஸாநாயக்க இது குறித்து விளக்குகையில்: "யுத்த காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனம் எந்தப் பகுதியைச் சேர்ந்தது என்பதை அடையாளம் காண 'அதிர்வெண் அடையாளத்துடன்' (Frequency ID) மாகாண குறியீடுகள் சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த அடையாளத்தை வாசிக்க பொலிஸாரிடம் உரிய கருவிகள் (Readers) அப்போது இருக்கவில்லை. எனவே, தற்போது அத்தகைய தேவை இல்லை என்பதால் மாகாண குறியீடுகளை நீக்கத் தீர்மானிக்கப்பட்டது."
தனிப்பயனாக்கப்பட்ட இலக்கத் தகடுகள் (Personalized Plates): ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்புகையில், "பிரபல வர்த்தகர் டட்லி சிறிசேனவின் கார் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். அவரது வாகன இலக்கத் தகட்டில் 'Dudley' என்ற பெயரையே பொறித்துக்கொள்ள முடியாதா?" எனக் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த ஆணையாளர் பிரியந்த திஸாநாயக்க, "நிச்சயமாக முடியும் சார். அந்த முறையை இலங்கைக்கு அறிமுகப்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம். எமது கணினி கட்டமைப்பு (System update) புதுப்பிக்கப்பட்டவுடன், இவ்வாறான விசேட செயற்திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம்," எனத் தெரிவித்தார்.


