Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

24 வயது இளம் பெண்ணுடன் இருந்த கத்தோலிக்க மதகுரு!

T

The Leader Desk

ஜூன் 4, 2023 • 9:34 AM

24 வயது இளம் பெண்ணுடன் இருந்த கத்தோலிக்க மதகுரு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தங்கி இருந்த பொழுது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர்.
  • யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள தேவாலயமொன்றின் உதவி அருட்தந்தையான 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரும், மன்னாரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் இவ்வாறு பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
  • தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் நேற்று (03) இந்த சம்பவம் இடம்பெற்றது.
  • அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியில் செல்லும் நேரங்களில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் அந்த வீட்டுக்கு வருவதையும், அவர் வரும் சமயங்களில் பல இளம் பெண்கள் அங்கு வந்து செல்வதையும் அருகிலுள்ள மக்கள் அவதானித்துள்ளனர்.
எழுத்து அளவு:
தங்கி இருந்த பொழுது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள தேவாலயமொன்றின் உதவி அருட்தந்தையான 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரும், மன்னாரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் இவ்வாறு பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் நேற்று (03) இந்த சம்பவம் இடம்பெற்றது.

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆசிரியை ஒருவர் தங்குவதாக கூறி வீடு ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அங்கு தங்கி இருந்தவர் ஆசிரியை அல்ல என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அவரது நடத்தையில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியில் செல்லும் நேரங்களில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் அந்த வீட்டுக்கு வருவதையும், அவர் வரும் சமயங்களில் பல இளம் பெண்கள் அங்கு வந்து செல்வதையும் அருகிலுள்ள மக்கள் அவதானித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியமும் இளம்பெண் ஒருவருடன் கத்தோலிக்க மதகுரு அங்கு வந்துள்ளார்.

அவர்கள் வீட்டுக்குள் சென்றதும் அந்தப் பகுதி பொதுமக்கள் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். வீட்டுக்குள் மக்கள் சென்று பார்த்த போது அங்கு மதுபான போத்தல்கள் காணப்பட்டுள்ளன.. அத்துடன் கத்தோலிக்க மத குருவின் வெள்ளை மேலங்கியும் அங்குள்ள கதிரை ஒன்றில் காணப்பட்டுள்ளது.

மதகுருவையும் அவருடன் தங்கி இருந்து யுவதியையும் பிடித்த பொதுமக்கள் தெல்லிப்பழை பொலிசாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிசார் அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர், எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...