சர்வதேச வன தினம் இன்று (21) கொண்டாடப்படுகின்றது.ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, 2012 நவம்பர் 28 ஆம் திகதி, சர்வதேச வன தினமாக மார்ச் 21 ஆம் திகதியை அறிவித்தது.

இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னர் கடந்த 2013 முதல் ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ஆம் திகதி சர்வதேச வன தினம் அனைவராலும் கொண்டாடப்படுகின்றது.

அழிந்துவரும் வன விலங்குகளைக் காப்பதற்காகவும், இயற்கைச் சமநிலை மாறுபடாதிருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

68வது ஐ.ந பொதுச் சபை கூட்டத்தில் கடந்த டிசம்பர் 20ஆம் திகதி அரிய வனவிலங்குகளின் சர்வதேச வர்த்தக சாசனத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டதையடுத்து, இந்த தினத்தை 'உலக வனவிலங்கு' தினமாக ஐ.நா அறிவித்தது. இந்த தினத்தில் வனவிலங்குகளின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருவில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இன்றைய சூழலில், தோலுக்காக புலிகள், இறைச்சிக்காக மான்கள், தந்தத்திற்காக யானைகள் என மனிதனால் விலங்கள் வேட்டையாடப்படுகின்றன. தற்போதுள்ள சூழ்நிலையில் விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை உணரும் வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

நாட்டின் வேலியாய் விளங்கும் காடுகளையும், விலங்குகளையும் காப்பது குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை கருத்தில் கொண்டு வனங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி