ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத்தொடரில், தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில், அதனுடன் இணைந்து செயற்படும்

ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) சார்பாக கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள், தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் கடந்த 10/03/2021 அன்று இடம்பெற்ற பிரிவு 3 - அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான பொது விவாதத்தில் ஏபிசி தமிழ் ஒலி (ABC Tamil Oli) அமைப்பின் சார்பாக சுபத்திரா வரதராயா தங்களது உரையை வழங்கினார்.

அதில் மனித உரிமை பேரவையின் உயர் ஆணையரின் அறிக்கைக்கும் 10 சிறப்பு பொறிமுறை அதிகாரமுள்ளவர்களின் அறிக்கைக்கும் நன்றி தெரிவித்தார். ஏனென்றால் அதில் ஈழத்தமிழர்ககளுக்கு எதிராக நடத்தப்பட்ட அனைத்துவிதமான இனப்படுகொலையைப்பற்றி விளக்கினார்கள்.

ஆனால் தமிழர்கள் அமைப்புசார்ந்த இன அழிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர்கள் தங்களது அறிக்கையில் தெளிவுபடுத்தவில்லை என்று சுட்டிக்காட்டினார். முன்னாள் ஜனாதிபதி இன்று பிரதமராக மாறினார். அவரது சகோதரர் ஜனாதிபதியாக மாறினார்.

இவர்களது 15 மாத சர்வாதிகார ஆட்சியில் தமிழ் மக்கள் தங்களது சுதந்திரம், அடையாளம், சமயம், நிலம், தங்களது இறந்த உறவுகளை நினைவு கூரும் உரிமை, முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவு கூரும் உரிமை, கருப்பு ஜுலையை நினைவு கூரும் உரிமை, 17 நாட்கள் நீரின்றி, உணவின்றி தனது வாழ்வை ஈகம் செய்த தியாக தீபனை நினைவு கூரும் உரிமை ஆகியவற்றை தொடர்ந்து இழந்து கொண்டிருக்கின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி