வருடாந்தம் மார்ச் 20ஆம் திகதி உலக வாய் சுகாதார தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இம்முறை 'வாயின் பெறுமதி அதன் பேறு'

எனும் தொனிப்பொருளில் உலக வாய் சுகாதார தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. 

எமது உடம்பின் முக்கிய பகுதியான தலையுடன் சேர்ந்துதான் வாயும் இருக்கின்றது. வாயுறுப்பானது தன்னகத்தை தாங்கி இருக்கக்கூடிய பற்கள், பற்களை தாங்கி இருக்கின்ற முரசுப்பகுதிகள் நாக்கு, உமில் நீர் சுரப்பி, வாய் மென்சவு பகுதி, உதட்டுப்பகுதி மற்றும் உட்தொண்டை பகுதி என அவை யாவற்றையும் தன்னகத்தை அடக்கிக்கொண்டிருக்கின்றது. இவ் ஒவ்வொரு உறுப்பினதும் ஆரோக்கியமும் தொழிற்பாடும் எமது உடற்தொழிற்பாடு ஆரோக்கியமாக அமைவதற்கு பெரும் துணைபோகின்றன.

அந்த வகையில் இன்றைய காலத்தில் பேசுபொருளான கொவிட் தொற்றானது வாயுறுப்பு மூலகமாகவே அதிகமாக காணப்படுகின்றது. ஆகவே இந்த வாயுறுப்பை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பேணுவது எமக்காகவும் எம்மோடு இருக்கும் மற்றவர்களின் சுகத்தை பாதுகாத்துக்கொள்வதிலும் நாம் அதனை கட்டாயம் செய்யவேண்டிய கடமைப்பாட்டுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றோம்.

வாயுறுப்பை எவ்வாறு ஆரோக்கியமாக பாதுகாப்பது

வாயில் வரக்கூடிய நோய்களான முரசு கரைதல், பல் தேயிதல் மற்றும் வாய் புண்கள் ஏற்படுதல் போன்ற தொற்றுநோய்களில் இருந்து எம்மை விடுவித்துக்கொள்ளவேண்டும். மேலும் எமது தேவையற்ற உணவுப்பழக்கமான சீனி சாப்பாடுகளை அதிகம் சாப்பிடுவது, புகைப்பது, மது அருந்துவது வெற்றிலை சாப்பிடுவது போன்ற விடயங்களில் இருந்து தவிர்ந்துகொள்வதன் மூலமாக எமது வாயின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும். 

அதுமாத்திரமல்லாது எமது வாயுறுப்பானது பேசுவதற்கு, உணவை மென்று, ருசித்து சாப்பிடுவதற்கு எமது முகத்துக்கு அழகிய தோற்றத்தை தருவதற்கு இன்னோரன்ன பல உதவிகளை செய்கின்றது. ஆகவே நாம் எமது அழகிய தோற்றத்தை பிரதிபலிப்பதற்கு எமது வாயுறுப்பும் மேல் கீழ் தாடையில் அமைந்துள்ள பற்களின் வரிசையும் எமக்கு முக்கியமாக இருக்கின்றது. ஆகவே நாம் அவற்றை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். இன்றைய கொவிட் காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் காணப்படும் பிரச்சினைத்தான் பற்சிகிச்கை அளிப்பதாகும். ஏனெனில் இருவருக்கிடையில் தூர இடைவெளி 2 மீற்றராக வைத்துக்கொள்ளவேண்டும் என்பது உலகளாவிய ரீதியில் மக்களுக்கு வழங்கப்படுகின்ற ஆலோசனையாக இருக்கின்றது. 

இருந்தபோதும் நாம் பல் வைத்தியர் ஒருவரிடம் சென்று பற்சிகிச்சையோ அல்லது வாய் சம்பந்தமான சிகிச்சை பெறுகின்றபோது அவ்வாறு 2 மீற்றர் இடைவெளியை பேணி செயற்படுவது இதுவரைக்காலமும் அது நடைமுறைக்கு சாத்தியமற்றதொன்றாகவே இருக்கின்றது. அந்தவகையில் கொவிட் தொற்று காலப்பகுதி எமது பற்சிகிச்சையை முறையாக மேற்கொள்வதற்கு பெரும் சவாலாக இருக்கின்றது.

கொவிட் காலத்தில் வாய் ஆரோக்கியத்தை எவ்வாறு பேணுவது

கொவிட்  காலத்தில் வாய் ஆரோக்கியத்தை எவ்வாறு பேணுவதென்ற பிரச்சினை இருக்கின்றது. பொதுவாக உலக நாடுகளில் இதற்கு இரண்டு முறைகள் இருக்கின்றன. அதாவது, முற்பாதுகாப்பாக இருந்து நாங்கள் பல்நோய்களில் இருந்து தவிர்ந்துகொள்ளல், மற்றது நோய் ஏற்பட்ட பின்னர் அது மேலும் அதிகரிக்காமல் பாதுகாத்துக்கொண்டு சிகிச்சை முறைகளை பெற்றுக்கொள்வது. 

முற்பாதுகாப்பு எவ்வாறு பெற்றுக் கொள்வது என்று பார்த்தால் , நாள் ஒன்றுக்கு இரு தடவைகள், குறைந்தது 5 நிமிடங்களாவது பல் துலக்கிக்கொள்ளவேண்டும்.  பற்தூரிகைகளை பயன்படுத்தும் போது , ஒரு மாதம் அல்லது மூன்று மாத இடைவெளிக்குள் தூரிகையை மாற்றிக்கொள்ள வேண்டும். புளோரைட் கொண்ட பற்தூரிகைகளை பயன்படுத்துவதனால் பற்களுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு பெறமுடியும்.

அதேபோன்று முரசு கரைதல், முரசு சிதைவடைதல் உள்ளிட்ட நோய்களுக்கு எமது நாளாந்த உணவு பழக்கங்களே காரணமாக அமைகின்றது. குறிப்பாக சீனி கூடிய ஆகாரங்களை முடியுமானளவு குறைத்துக்கொள்ளவேண்டும். சீனித்தன்மை கூடிய உணவுப்பொருட்களை அடிக்கடி நாங்கள் வாயில் போட்டு மெல்வது, எமது பற்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒன்றாகும். அது மாத்திரமல்லாது, வெற்றிலை சாப்பிடுவது, புகைப்பது, மதுபானங்களை அருந்துவதும் எமது வாய் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துடன் முக அழகையும் இல்லாமலாக்கிவிடும். உதாரணமாக வெற்றிலை சாப்பிடும்போது, புகைக்கும்போது காலப்போக்கில் எமது முரசுப்பகுதில் கறைகளாக பதிந்து, அதன் இயற்கைத்தன்மையை இல்லாமலாக்கிவிடுகின்றதுடன் எமது ஆரோக்கியம் மற்றும் அழகையும் பறித்து விடுகின்றன. ஆகவே இவ்வாறான பழங்கங்களை நாங்கள் விட்டுவிடுவதன் மூலம் எமது ஆரோக்கியமான பல் வரிசைகளை பாதுகாத்துக்கொள்ளலாம்.

மேலும் வாகனங்களில் செல்லும்போது ஏற்படும் விபத்துக்களில் இருந்து எமது முகம், வாய் பகுதிகளை பாதுகாத்துக்கொள்ள தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவேண்டும். குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்லல், வாகனத்தின் முன் ஆசனத்தில் செல்லும்போது வாகன இருக்கை பட்டியை அணிந்துகொள்ளல் போன்ற விடயங்களை பேணிக்கொள்வதன் மூலம் விபத்துக்களின்போது எமது முக, வாய் பகுதிகளை பாதுகாத்துக்கொள்ளலாம். அதேபோன்று அனைத்து சத்துகளைக்கொண்ட உணவு வகைகளை உண்பதாலும், சுகாதார முறைப்படி சமைத்து சாப்பிடுவதனாலும் பற்களுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

அத்துடன் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மேற்கொள்ளப்படும் ஆரோக்கிய கலந்துரையாடல்கள் முன்பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மேற்கொள்ளப்படும் கருத்தரங்குகள்  இவ்வாறான விழிப்புணர்வூட்டக்கூடிய கருத்தரங்குகள் எமது மக்களின் சிந்தனையை தூண்டி அவர்கள் மேற்கொண்டுவரும் பழக்கவழக்கங்களில் இருந்து தவிர்ந்து முறையான நல்ல பழக்க வழங்கங்களை பின்பற்றுவதன் மூலமாக வாய் சுகாதாரத்தை பாதுகாத்துக்கொள்ளலாம். அதேபோன்று வீதி நாடகங்களை ஏற்பாடு செய்து வாய் சுகாதாரத்தின் முக்கியத்தும் தொடர்பாக விழிப்புணர்களை ஏற்படுத்துவதன் மூலமும் மக்களுக்கு அதுதொடர்பான தெளிவுகள் கிடைப்பதுடன் அதன் தேவையையும் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

எனவே, பல்லுப்போனால் சொல்லுப்போகும் என தெரிவிக்கப்படுகின்றது. அதனால் தெளிவாக பேசுவதற்கு எமக்கு பற்கள் அவசியமாகும். அதனால்  வருடத்துக்கு இரண்டு தடவையேனும் பல் வைத்தியரிடம் சென்று எமது வாயை பரிசோதித்த்துக்கொள்ளவேண்டும். 

எமது நாட்டில் பற்சுகாதாரத்தை பேணுவதற்கு மேற்கொள்ளும் வழிகள்
சமூக பல் வைத்தியர்கள் இருக்கின்றனர். சுகாதார சேவை நிலையங்களில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அங்கு அவர்களது பற்கள் பரிசோதித்து, அவர்களது வளரும் குழந்தையின் ஆரோக்கியம் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதேபோன்று வாய் சுகாதாரம் தொடர்பாக பாடசாலைகளிலும் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை  ஊடாக இது தொடர்பாக விழிப்புணர்வூட்டப்படுகின்றது. குறிப்பாக எமது நாட்டில் கொழும்பில் அமைந்துள்ள போதனா பல் வைத்தியசாலையில் அனைத்து வகையான வாய் சம்பந்தப்பட்ட பிச்சினைகளுக்கும் சிகிச்சை முறைகள் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.  அதேபோன்று அனைத்து மாவட்டங்களிலும்  கிராமிய மட்டங்களில் பல்வைத்திய பிரிவுகள் இருக்கின்றன. அங்கு சென்றாலும் எமக்கு தேவையான ஆலோசனைகள் சிகிச்சைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 

மேலும், வாய் புற்றுநோய்கள் இருப்பவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் வைத்தியசாலைகள் இருக்கின்றன. குறிப்பாக மஹரமக புற்றுநோய் வைத்தியசாலை, கண்டி வைத்தியசாலை, பல் போதனா வைத்தியசாலை போன்றவற்றில் எமக்கு தேவையாக சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம். எனவே எமது நாடு முன்பள்ளி முதல் முதியோர்வரை இலவச பல் வைத்தியத்தை வழங்கி வருகின்றமை எமக்கு பெருமையாக உள்ளது. அதனை நாங்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு எமது வாய் சுகாதாரத்தை பாதுகாத்துக்கொள்ள முன்வரவேண்டும்

பல் வைத்தியர் அத்ஹரா சாதிக்
(குடும்ப உளவள ஆலோசகர்)
கொழும்பு மாநகரசபை முகத்துவாரம் வைத்தியசாலை

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி