உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல், ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில்  இந்த ஆண்டுக்கான பட்டியலில்

உலகின் முகவும் மகிழ்ச்சியான நாடாக  பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. 

மொத்தம் 149 நாடுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, சுகாதாரம், கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த ஒன்பது இடங்களில் முறையே டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, நோர்வே, ஸ்வீடன், லக்ச்ம்பர்க், நியூசிலாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

முதல் 10 இடங்களில் ஐரோப்பா அல்லாத நாடாக நியூசிலாந்து இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 13ஆவது இடத்திலிருந்து பிரித்தானியா 17ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் உலகில் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடுகளாக ஆப்கானிஸ்தான், அதைத் தொடர்ந்து லெசோதோ, பொட்ஸ்வானா, ருவாண்டா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

பல ஆசிய நாடுகள் கடந்த ஆண்டு தரவரிசையில் இருந்ததை விட முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 94ஆவது இடத்திலிருந்த சீனா 84ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி