ஒன்றுக்கு பின்புறமாகவுள்ள கடற்கரையில், உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் மனிதத் தலையொன்று இன்று (23) காலை கரை ஒதுங்கியுள்ளது.
இன்று காலை அளுத்கம பொலிஸாருக்குக் கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பொன்றின் மூலமே இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த மனிதத் தலைப் பகுதியை மீட்டுள்ளனர்.
அடையாளம் காண முடியாத நிலை
பின்னேர விசாரணைகளின்படி, கரை ஒதுங்கியுள்ள தலைப் பகுதி ஒரு ஆணுக்குரியது என அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அது யாருடையது என்பது போன்ற எந்தவொரு விபரமும் அல்லது கொலையுண்டவரின் அடையாளமும் இதுவரை கண்டறியப்படவில்லை.
இது கொலையா அல்லது கடலில் மூழ்கியதால் ஏற்பட்ட அசம்பாவிதமா என்ற கோணத்தில் அளுத்கம பொலிஸார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


