Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

இலங்கை மற்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்

T

The Leader Desk

ஏப்ரல் 23, 2026 • 4:32 AM

இலங்கை மற்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரக்ச்சியுடன் (Abbas Araghchi) தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
  • இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படை விதிகள் மற்றும் 1949 ஜெனிவா உடன்படிக்கைகளை கடுமையாக மீறும் செயலாகும் என்றும், இந்த குற்றத்தை ஈரான் ஒருபோதும் மறக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.
  • அமெரிக்காவின் தாக்குதல் குறித்த ஈரானின் நிலைப்பாடு: அமெரிக்காவினால் IRIS Dena கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது முன்னெப்பொழுதும் இல்லாத ஒரு போர்க்குற்றம் என அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி இதன்போது சுட்டிக்காட்டினார்.
எழுத்து அளவு:

அரக்ச்சியுடன் (Abbas Araghchi) தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, IRIS Dena கப்பலின் மாலுமிகளை மீட்பு நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கும், அந்தக் கப்பலின் ஊழியர்கள் மற்றும் ஏனைய ஈரானிய கடற்படை அதிகாரிகளின் உடல்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புவதற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளதாக இலங்கையிலுள்ள ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதல் குறித்த ஈரானின் நிலைப்பாடு:

அமெரிக்காவினால் IRIS Dena கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது முன்னெப்பொழுதும் இல்லாத ஒரு போர்க்குற்றம் என அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படை விதிகள் மற்றும் 1949 ஜெனிவா உடன்படிக்கைகளை கடுமையாக மீறும் செயலாகும் என்றும், இந்த குற்றத்தை ஈரான் ஒருபோதும் மறக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்த குற்றவாளிகள் மற்றும் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு தேவையான அனைத்து சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளையும் ஈரான் பயன்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள ஈரானிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமைச்சர்களான அப்பாஸ் அரக்ச்சி மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...