Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

சாரதியைக் கொன்றுவிட்டு ஆட்டோ கொள்ளை: 16 வயது சிறுவன் கைது!

T

The Leader Desk

பிப்ரவரி 23, 2026 • 5:29 AM

சாரதியைக் கொன்றுவிட்டு ஆட்டோ கொள்ளை: 16 வயது சிறுவன் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • புத்தளம், தில்அடிய - ரத்மல்யாய பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • நேற்று (22) காலை புத்தளம், அடப்பனாவில்லுவ பிரதேசத்திலுள்ள வாய்க்கால் ஒன்றினுள் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
  • இதன்போது, கடந்த 21ஆம் திகதி தனது முச்சக்கரவண்டியில் வாடகைப் பயணம் (Hire) சென்ற 75 வயதுடைய அப்துல் லத்தீப் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
எழுத்து அளவு:

தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், தில்அடிய - ரத்மல்யாய பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (22) காலை புத்தளம், அடப்பனாவில்லுவ பிரதேசத்திலுள்ள வாய்க்கால் ஒன்றினுள் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது, கடந்த 21ஆம் திகதி தனது முச்சக்கரவண்டியில் வாடகைப் பயணம் (Hire) சென்ற 75 வயதுடைய அப்துல் லத்தீப் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

சம்பவம் இடம்பெற்ற தினமன்று இரவு 9.30 மணியளவில், குறித்த 16 வயது சந்தேகநபர் உயிரிழந்தவரின் வீட்டிற்குச் சென்றுள்ளதாகவும், அவருடன் இணைந்தே உயிரிழந்தவர் வாடகைப் பயணத்திற்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த திரிரோத வண்டியைக் கொள்ளையிடும் நோக்கில், சந்தேக நபரால் சாரதியின் கழுத்துப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் சடலத்தை வீசிவிட்டு முச்சக்கரவண்டியை சந்தேகநபர் கடத்திச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, புத்தளம் முல்லை வீடமைப்புத் தொகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் குறித்த முச்சக்கரவண்டியை சந்தேகநபர் கைவிட்டுச் சென்றுள்ள நிலையில், பொலிஸார் அதனை மீட்டிருந்தனர்.

இதனை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகநபர் நேற்று அவரது வீட்டில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்குத் தீவிரமாக அடிமையானவர் எனவும், பணம் மற்றும் முச்சக்கரவண்டியைக் கொள்ளையிடும் நோக்கிலேயே இந்தப் படுகொலையைச் செய்துள்ளதாக அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...