அந்த சங்கத்தின் ஏற்பாட்டுக் குழுவினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கடும் எதிர்ப்பினைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாமல ராஜபக்ஷ, இன்றைய தினம் ஒக்ஸ்போர்ட் மாணவர் சங்கத்தில் உரையாற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர், நாமல ராஜபக்ஷ கேம்பிரிட்ஜ் மாணவர் சங்கத்தில் (Cambridge Union) உரையாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், அங்கேயும் எழுந்த எதிர்ப்புகள் காரணமாக அந்த உரையும் பின்னர் ரத்து செய்யப்பட்டிருந்தது.
கடந்த 2010ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒக்ஸ்போர்ட் சங்கத்தில் உரையாற்றுவதற்காக பிரித்தானியா சென்றிருந்த வேளையில், புலம்பெயர் தமிழ் மக்களினால் முன்னெடுக்கப்பட்ட பாரிய எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக அந்த உரை ரத்து செய்யப்பட்டிருந்தது.
தற்போது அதே போன்றதொரு நிலைமை அவரது புதல்வர் நாமல ராஜபக்ஷவிற்கும் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


