Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

“மக்கள் தீர்மானித்தால் பதவி விலகத் தயார்!'

T

The Leader Desk

ஜனவரி 23, 2026 • 8:01 PM

“மக்கள் தீர்மானித்தால் பதவி விலகத் தயார்!'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என நாட்டு மக்கள் தீர்மானித்தால், தான் அதிலிருந்து விலகத் தயார் என பிரதமர், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
  • சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற 2026 உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர், இன்று (23) காலை நாட்டிற்கு வருகை தந்தார்.
  • அது வரும் வரை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
எழுத்து அளவு:

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என நாட்டு மக்கள் தீர்மானித்தால், தான் அதிலிருந்து விலகத் தயார் என பிரதமர், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற 2026 உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர், இன்று (23) காலை நாட்டிற்கு வருகை தந்தார்.

அதன் பின்னர் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொள்வதற்காக இன்று பிற்பகல் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைக் குறிப்பிட்டார்.

"ஜனாதிபதியை நீக்க முடியவில்லை. குறைந்தபட்சம் பிரதமரையாவது நீக்க முயற்சி செய்தார்கள் தானே. எங்கே அது? நான் இன்று காலை வந்ததும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகங்கொடுக்கவே ஓடிவந்தேன். அது வரும் வரை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். கொண்டு வரவில்லையா? வீண் வேலை. நாங்கள் தயாராகவே இருந்தோம்."

"நீங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரத் தேவையில்லை. பிரதமர் மாற வேண்டும் என இந்நாட்டு மக்கள் தீர்மானித்தால்... நாங்கள் வீட்டுக்குச் செல்லவும் தயார். நாங்கள் இந்நாட்டு மக்களுக்கே பொறுப்புக்குரியவர்கள். அதற்கமைய நாங்கள் செயற்படுவோம்," எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

“மக்கள் தீர்மானித்தால் பதவி விலகத் தயார்!' | Tamil Leader | We Lead the Nation