இலியாஸ் தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் போன்ற உயர் அதிகாரிகளை நீக்குவதற்கு விசேட நடைமுறைகள் உள்ளதால், அவர்களை இலகுவாக நீக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தாலுமே அவர்களை நீக்க முடியாது எனவும், அரசாங்கங்கள் மாறும் போதெல்லாம் அரச அதிகாரம் மாறாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தாமதங்கள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், அரசாங்கத்தை விமர்சிக்கும் சட்டத்தரணிகள் மற்றும் மதத் தலைவர்களுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தப்படும் என்ற கூற்றுக்கள் ஒழுக்கமானவை அல்ல எனவும், நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


