சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர்களுக்கு எதிரான வழக்கு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கின் அடிப்படையில், கடந்த 5ஆம் திகதி நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வத்தளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, சந்தேகநபர் உள்ளிட்ட குழுவினரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


