Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

3 வருடங்களாக மக்களை ஏமாற்றிய வாழைச்சேனை போலி மருத்துவர் சிக்கினார்!

T

The Leader Desk

ஜனவரி 23, 2026 • 5:37 AM

3 வருடங்களாக மக்களை ஏமாற்றிய வாழைச்சேனை போலி மருத்துவர் சிக்கினார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
  • இதன்போது, அங்கு பணியில் இருந்த நபரிடம் மருத்துவ அடையாள அட்டை மற்றும் நிலையத்திற்கான அனுமதிப்பத்திரங்களை அதிகாரிகள் கோரியுள்ளனர்.
  • வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண் ஓடை பிரதேசத்தில் நபர் ஒருவர் மருத்துவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
எழுத்து அளவு:

வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண் ஓடை பிரதேசத்தில் நபர் ஒருவர் மருத்துவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இவர் கண்டி பல்லேகல பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் போல போலியான தரவுகள் மற்றும் மருத்துவர் போன்று உடையணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி, அதனை நம்பவைத்து கடந்த மூன்று வருடங்களாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த மருத்துவ நிலையம் அதிரடியாக முற்றுகையிடப்பட்டது.

இதன்போது, அங்கு பணியில் இருந்த நபரிடம் மருத்துவ அடையாள அட்டை மற்றும் நிலையத்திற்கான அனுமதிப்பத்திரங்களை அதிகாரிகள் கோரியுள்ளனர்.

எனினும், அவரிடம் முறையான எந்தவொரு ஆவணங்களும் இல்லையென்பதும், அவர் ஒரு போலி மருத்துவர் என்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த முற்றுகையின் போது, அந்த நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை பொலிஸார் சான்றுப் பொருட்களாக மீட்டுள்ளனர்.

33 வயதுடைய குறித்த நபர், உயர் தரத்தில் மருத்துவ துறையில் கல்வி கற்று வந்ததாகவும், போதிய புள்ளிகள் இல்லாமல் மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்படாமையால், கண்டிக்கு சென்று அங்கு மருத்துவ துறைக்கு கல்வி கற்று வந்த நிலையில், தனது சொந்த ஊரான செம்மண் ஓடையில் இந்த கிளினிக்கை இயங்கி வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் வாழைச்சேனை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

3 வருடங்களாக மக்களை ஏமாற்றிய வாழைச்சேனை போலி மருத்துவர் சிக்கினார்! | Tamil Leader | We Lead the Nation