நிலையத்திலிருந்து பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல், பண்டாரவளைப் பகுதியில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 12.5 டிகிரி செல்சியஸ் எனவும், பதுளைப் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 14.8 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மகாஇலுப்பள்ளம பகுதியில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19.3 ஆகக் காணப்பட்டது.
அத்துடன், வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்களில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை பெறுமானங்கள் ஒரு வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


