போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலவச சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமை காரணமாகவே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள், சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகளில் இந்த வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்பட மாட்டாது என அந்தச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.


