Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

'அவதானமாக இருங்கள்'; பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு!

T

The Leader Desk

மே 22, 2026 • 4:58 AM

'அவதானமாக இருங்கள்'; பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாவட்டங்களுக்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
  • இன்று முற்பகல் 6:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளை (23) பிற்பகல் 6:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரிக்கு 'அம்பர்' நிற எச்சரிக்கை மேற்குறிப்பிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 2ஆம் கட்ட நிலச்சரிவு அபாய எச்சரிக்கை (Level 2 - Amber) விடுக்கப்பட்டுள்ளது.
  • இதன்படி, சீதாவக்க, பாதுகா, அத்தனகல்ல, இங்கிரிய, புலத்சிங்கள, ருவன்வெல்ல, பெல்மதுள்ள, குருவிட்ட மற்றும் அயகம ஆகிய பகுதிகள் அவதானமிக்க வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

மாவட்டங்களுக்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்

அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவங்கொடை, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை (Minor Flood) ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்தத் தாழ்நிலப் பகுதிகளை ஊடறுத்துச் செல்லும் சில வீதிகள் பல இடங்களில் நீரில் மூழ்கும் அபாயமும் காணப்படுகின்றது.

கடந்த சில மணித்தியாலங்களில் அத்தனகலு ஓயா படுக்கையின் நீரேந்துப் பகுதிகளில் கணிசமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதால், அப்பகுதிகளில் வாழும் மக்களும் அந்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கேகாலை மற்றும் இரத்தினபுரிக்கு 'சிவப்பு எச்சரிக்கை' (Level 3 Red Alert)

இன்று (22) முற்பகல் விடுக்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை அறிவித்தலின்படி, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு 3ஆம் கட்ட சிவப்பு எச்சரிக்கை (Level 3 - Evacuation) விடுக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 6:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளை (23) பிற்பகல் 6:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரிக்கு 'அம்பர்' நிற எச்சரிக்கை மேற்குறிப்பிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 2ஆம் கட்ட நிலச்சரிவு அபாய எச்சரிக்கை (Level 2 - Amber) விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சீதாவக்க, பாதுகா, அத்தனகல்ல, இங்கிரிய, புலத்சிங்கள, ருவன்வெல்ல, பெல்மதுள்ள, குருவிட்ட மற்றும் அயகம ஆகிய பகுதிகள் அவதானமிக்க வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் யடியன்தோட்டை, அம்பகமுவ, எஹலியகொட, நிவித்திகல மற்றும் கலவானை ஆகிய பகுதிகளுக்கு முதலாம் கட்ட மஞ்சள் நிற (Level 1 - Yellow) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களு கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு; தாழ்நிலங்களுக்கு வெள்ள அபாயம்

இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபாத மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் களு கங்கையின் வெள்ளப் பெருக்கு சமவெளியைச் சேர்ந்த தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ள அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இன்று காலை 6:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அம்பர் நிற வெள்ள எச்சரிக்கை அறிவித்தல் நாளை (23) காலை 6:00 மணி வரை செல்லுபடியாகும். களு கங்கை படுக்கைக்குக் கிடைத்து வரும் பலத்த மழை வீழ்ச்சி மற்றும் நீர்மானிகளின் தரவுகளை ஆய்வு செய்தே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை நிறங்களின் விளக்கங்கள்

இன்று முற்பகல் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு அம்பர் நிற 2ஆம் கட்ட எச்சரிக்கையும், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் புலத்சிங்கள, எஹலியகொட ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் நிற முதலாம் கட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

இதில், அம்பர் நிற 2ஆம் கட்ட எச்சரிக்கை என்பது “அவதானமாக இருங்கள்” (Watch) என்பதையும், மஞ்சள் நிற முதலாம் கட்ட எச்சரிக்கை என்பது “விழிப்புடன் இருங்கள்” (Vigilance) என்பதையும் குறிப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த அனைத்து எச்சரிக்கை அறிவித்தல்களும் இன்று (22) முதல் நாளை (23) வரையான வெவ்வேறு காலப்பகுதிகளுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...