Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஆறுகளை அண்மித்து வாழ்வோருக்கு எச்சரிக்கை!

T

The Leader Desk

மே 22, 2026 • 4:27 AM

ஆறுகளை அண்மித்து வாழ்வோருக்கு எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவிசாவளையிலிருந்து ஹங்வெல்ல வரையான சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • களனி கங்கையை அண்மித்து வாழ்வோருக்கு எச்சரிக்கை களனி கங்கையை சூழவுள்ள பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • களனி கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் தற்போது 300 மில்லிமீட்டரை நெருங்கிய கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
  • அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை நிலவும் பலத்த மழை காரணமாக, அத்தனகலு ஓயாவை சூழவுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எழுத்து அளவு:

அவிசாவளையிலிருந்து ஹங்வெல்ல வரையான சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளJ.

புவக்பிட்டிய தும்மோதர சந்தி, சீதாவக்க தாவரவியல் பூங்கா மற்றும் எட்டியாந்தோட்டை பகுதியின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, பலுமஹர - கடுவெல புதிய கண்டி வீதி உடுப்பில பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக அவ்வீதியூடான இலகுரக வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களனி கங்கையை அண்மித்து வாழ்வோருக்கு எச்சரிக்கை

களனி கங்கையை சூழவுள்ள பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இக்காலப்பகுதிக்குள் ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே, தெஹிஓவிட்ட, எஹலியகொட, எட்டியாந்தோட்டை மற்றும் புலத்கொஹுபிட்டிய ஆகிய பகுதிகளைச் சூழவுள்ள இடங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

களனி கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் தற்போது 300 மில்லிமீட்டரை நெருங்கிய கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்த மழை நிலவரம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் களனி கங்கையில் பராமரிக்கப்பட்டு வரும் ஆற்றின் நீர்மட்ட அளவீட்டு கருவிகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் இச்சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக, இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அந்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

நிலவும் பலத்த மழை காரணமாக, அத்தனகலு ஓயாவை சூழவுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று (21) இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக பல நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அத்திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.

இதற்கமைய, தூனமலை நீர் அளவீட்டு நிலையத்தின் தரவுகளின்படி தற்போது 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், சில இடங்களில் 250 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக கம்பஹா, கட்டான, வத்தளை போன்ற தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சில இடங்களில் 200 - 300 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார, இது தொடர்பான மேலதிக நிலவரங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

கட்டுநாயக்க வந்த விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு

நிலவும் மோசமான காலநிலை காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 6 விமானங்களே இவ்வாறு மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...