வாகனமொன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இவ் விபத்தின் போது குறித்த வாகனத்தில் பயணித்த ஐவர் படுகாயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 22 மற்றும் 28 வயதுடைய இளைஞர்கள் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களை மேற்கோள் காட்டி பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஏனைய மூவர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பயாகலைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


