எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் 4 மாவட்டங்களைச் சேர்ந்த 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) இன்று (22) 'சிவப்பு எச்சரிக்கை' (வெளியேற்றல் உத்தரவு) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அபாய எச்சரிக்கை அறிவிப்பு நாளை (23ஆம் திகதி) வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் நிலை: சிவப்பு எச்சரிக்கை (உடனடியாக வெளியேறவும்)
பின்வரும் மாவட்டங்களின் குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:
கண்டி மாவட்டம்: யடிநுவர, தொலுவ, உடதும்பறை, கங்க இஹல கோரளை.
கேகாலை மாவட்டம்: அரநாயக்க, யட்டியாந்தோட்டை, மாவனல்லை, தெஹியோவிட்ட, கேகாலை.
மாத்தளை மாவட்டம்: உகுவலை, ரத்தோட்டை, அம்பன்கங்கை கோரளை, லக்கலை பல்லேகம, வில்கமுவ.
இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி.
இரண்டாம் நிலை: மஞ்சள் எச்சரிக்கை (அவதானமாக இருக்கவும்)
பின்வரும் பகுதிகளில் நிலச்சரிவுக்கான அறிகுறிகள் தென்படக்கூடும் என்பதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்:
பதுளை மாவட்டம்: ஹல்தும்முல்லை.
காலி மாவட்டம்: நியாகம.
கண்டி மாவட்டம்: மெததும்பறை, பாததும்பறை.
மொனராகலை மாவட்டம்: படல்கும்புர.
நுவரெலியா மாவட்டம்: நில்தண்டாஹீன்ன, வலப்பனை, நோர்வூட், அம்பகமுவ.
இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, அயகம, கலவானை.
முதலாம் நிலை: விழிப்புணர்வு எச்சரிக்கை (ஆயத்த நிலையில் இருக்கவும்)
பதுளை, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, குருநாகல், மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் ஏனைய 23 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள இந்த அறிவிப்பின்படி, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் நிலத்தில் வெடிப்புக்கள் ஏற்படுதல், மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்வடைதல் அல்லது திடீரென நீரூற்றுகள் தோன்றுதல் போன்ற மண்சரிவுக்கான அறிகுறிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


