Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

கண்டியில் மீளவும் அனர்த்த நிலைமை பிரகடனம்!

T

The Leader Desk

பிப்ரவரி 22, 2026 • 6:24 AM

கண்டியில் மீளவும் அனர்த்த நிலைமை பிரகடனம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார்.
  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 100 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் 07 பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
  • அத்துடன் கண்டி மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் தற்போது வரை 17 பாதுகாப்பு மையங்கள் இயங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக உடதும்பறை பிரதேசமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மாவட்ட செயலாளர், அப்பிரதேசத்தில் பல இடங்கள் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கிற்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உடதும்பறை, மகாவெல கிராம உத்தியோகத்தர் பிரிவில் இருவர் காணாமல் போயுள்ளதுடன், கங்கொட கிராம உத்தியோகத்தர் பிரிவில் பல வீடுகள் நிலச்சரிவில் சிக்கியுள்ளன.

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் இருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 100 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் 07 பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கண்டி மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் தற்போது வரை 17 பாதுகாப்பு மையங்கள் இயங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாவட்ட அனர்த்த மேலாண்மை குழு கூட்டத்தினைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய, கண்டி - மகியங்கனை வீதியின் 'பதினெட்டு வளைவு' (Daha Ata Wanguwa) ஊடான ஹசலக்க வரையிலான பகுதி, மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, பேராதனை - குஹாகொட வீதியின் சீமா மாலகயவிற்கு அருகில், ஏற்கனவே 'டிட்வா' (Ditwah) சூறாவளியின் போது நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீளவும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

வீதிக்கு மேல் பாரிய பாறைகள் சரிந்து விழுந்துள்ளதையடுத்து, குறித்த வீதியினை மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கண்டியில் மீளவும் அனர்த்த நிலைமை பிரகடனம்! | Tamil Leader | We Lead the Nation