Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

'டித்வா' தாக்கிய மலையகத்தை மீட்டெடுப்பதில் தடங்கல்!

T

The Leader Desk

ஜனவரி 22, 2026 • 2:57 AM

'டித்வா' தாக்கிய மலையகத்தை மீட்டெடுப்பதில் தடங்கல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிறுவனங்களின் ஒருங்கிணைப்பற்ற தனித்தனியான செயல்பாடு, டித்வா புயலினால் அழிவடைந்த மத்திய மலைநாட்டை மீட்டெடுப்பதில் தடையாக உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
  • தொடர்புடைய சட்டத்தின் மூலம் வலுப்படுத்தப்பட்ட அதிகார சபையின் தேவை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
  • மத்திய மலைநாட்டை விரைவாகப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் புதிய கட்டமைப்பை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
எழுத்து அளவு:

நிறுவனங்களின் ஒருங்கிணைப்பற்ற தனித்தனியான செயல்பாடு, டித்வா புயலினால் அழிவடைந்த மத்திய மலைநாட்டை மீட்டெடுப்பதில் தடையாக உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மத்திய மலைநாட்டை விரைவாகப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் புதிய கட்டமைப்பை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதுடன், காடுகளை மீண்டும் வளர்க்கும் திட்டம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் குறித்த அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

டித்வா புயல் காரணமாக மத்திய மலைநாட்டில் சுமார் 4,000 மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், நீண்டகாலமாக இடம்பெற்ற முறையற்ற நிர்மாணம், பயிர்ச்செய்கை மற்றும் பராமரிப்பு இல்லாததால் இது ஏற்பட்டுள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டதுடன், மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல விரைவான தேசியக் கொள்கையின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

தொடர்புடைய சட்டத்தின் மூலம் வலுப்படுத்தப்பட்ட அதிகார சபையின் தேவை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த நடவடிக்கைகளுக்கு நிதியமொன்றை பேண வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதிகள், மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க இலங்கைக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்நாட்டு பணிப்பாளர் அலுவலகப் பிரதானி Cholpon Mambetova, அதன் விவசாயம் மற்றும் இயற்கை வள சிரேஷ்ட நிபுணர் Sumith Pokhrel, உதவி திட்ட அதிகாரி கிருஷாந்தி தாபரே ஆகியோருடன், ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Azusa Kubota, அந்த திட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி வகீஷா குணசேகர, சுகந்தி சமரசிங்க, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...