Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

22 வருடங்களின் பின் தாய்லாந்து சென்றது முத்துராஜா

T

The Leader Desk

ஜூலை 2, 2023 • 5:33 AM

22 வருடங்களின் பின் தாய்லாந்து சென்றது முத்துராஜா

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யானையை ஏற்றிய விமானம் இன்று காலை 07.30 மணியளவில் தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டதாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
  • தாய்லாந்தில் இருந்து இந்நாட்டிற்கு வந்த மூன்று கால்நடை வைத்தியர்கள், ஒரு யானைப் பண்ணையாளர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்கவுள்ளனர்.
  • தாய்லாந்தில் இருந்து வந்த விசேட விமானம் மூலம் யானை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்தார்.
எழுத்து அளவு:

கொண்டு செல்லப்பட்டது.

 யானையை ஏற்றிய விமானம் இன்று காலை 07.30 மணியளவில் தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டதாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

தாய்லாந்தில் இருந்து வந்த விசேட விமானம் மூலம் யானை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  திலக் பிரேமகாந்த தெரிவித்தார்.

தாய்லாந்தில் யானைக்கு அந்நாட்டு கால்நடை வைத்தியர்களால் சிறப்பு சிகிச்சை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாய்லாந்தில் இருந்து இந்நாட்டிற்கு வந்த மூன்று கால்நடை வைத்தியர்கள், ஒரு யானைப் பண்ணையாளர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த விமானத்திற்காக தயாரிக்கப்பட்ட விசேட கூண்டுடன் பழகுவதற்கு "முத்துராஜா" யானைக்கு சுமார் ஒரு மாத காலம் பயிற்சியளிக்கப்பட்டதாகவும்  திலக் பிரேமகாந்த தெரிவித்தார்.

2001 ஆம் ஆண்டு தாய்லாந்து அரசாங்கம் "சக்சுரீன்" என்ற யானையை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.

ஆனால் இந்த யானையின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அதனை தாய்லாந்திற்கு மீண்டும் அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...