இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் (Apostolic Nuncio) மேதகு அன்ட்ரெஸ் ஜோஸ்வோலெஸ் (Monsignor Andrez Jozwowlez) இன்று வலியுறுத்தினார்.
எனினும், தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மை கண்டறியப்பட்ட பின்னரே அத்தகைய மன்னிப்பு வழங்கப்பட முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் ஏழாவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
"இந்த நினைவேந்தலானது பழிவாங்கும் உணர்வோடு அமையக்கூடாது. மாறாக, தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனேயே இது அமைய வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.


