Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள்!

T

The Leader Desk

ஏப்ரல் 21, 2026 • 5:03 AM

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள்!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதனையொட்டி, தீவின் அனைத்து தேவாலயங்களிலும் இன்று விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இதன்படி, அனைத்து தேவாலயங்களிலும் இன்று காலை மரண மணி ஒலி எழுப்புதல், 2 நிமிட மௌன அஞ்சலி, மெழுகுவர்த்தி அல்லது தேங்காய் எண்ணெய் விளக்கேற்றுதல் மற்றும் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் என்பன இடம்பெறவுள்ளன.
  • இன்று காலை 7.00 மணி முதல் திருப்பலி நிறைவடையும் வரை தேவாலயத்தை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
  • அத்துடன், நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா மைதானத்திலிருந்து இன்று மாலை 4.00 மணிக்கு ஆயர்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பங்கேற்புடன் 'பிரார்த்தனை நடைபயணம்' ஆரம்பமாகி, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியான் தேவாலய முன்றலில் நிறைவடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இதனையொட்டி, தீவின் அனைத்து தேவாலயங்களிலும் இன்று விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை அனைத்து தேவாலயங்களிலும் இந்த நினைவேந்தல்கள் நடைபெறும் என தேசிய கத்தோலிக்க வெகுசனத் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, அனைத்து தேவாலயங்களிலும் இன்று காலை மரண மணி ஒலி எழுப்புதல், 2 நிமிட மௌன அஞ்சலி, மெழுகுவர்த்தி அல்லது தேங்காய் எண்ணெய் விளக்கேற்றுதல் மற்றும் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் என்பன இடம்பெறவுள்ளன.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்:

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 7.00 மணி முதல் திருப்பலி நிறைவடையும் வரை தேவாலயத்தை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.

கட்டுவாப்பிட்டி மற்றும் யாத்திரை நடைபயணம்:

கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலும் விசேட திருப்பலி நடைபெறவுள்ளது. அத்துடன், நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா மைதானத்திலிருந்து இன்று மாலை 4.00 மணிக்கு ஆயர்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பங்கேற்புடன் 'பிரார்த்தனை நடைபயணம்' ஆரம்பமாகி, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியான் தேவாலய முன்றலில் நிறைவடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

தாக்குதல் பின்னணி:

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியான் தேவாலயம், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், தெஹிவளையில் உள்ள ஒரு விடுதி மற்றும் கொழும்பின் கிங்ஸ்பரி, ஷங்ரிலா, சினமன் கிராண்ட் ஹோட்டல்கள் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 268 பேர் உயிரிழந்ததுடன், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விசாரணைகளின் புதிய போக்கு:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 7 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், 'திசைக்காட்டி' (NPP) அரசாங்கத்தின் கீழ் இது தொடர்பான விசாரணைகள் புதிய திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...