Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

அரசியல் தலைவர்களை சிறையில் இருப்பது போல வீட்டுக்காவலில் வைக்க அரசாங்கம் தீர்மானம்!

T

The Leader Desk

பிப்ரவரி 21, 2026 • 5:41 AM

அரசியல் தலைவர்களை சிறையில் இருப்பது போல வீட்டுக்காவலில் வைக்க அரசாங்கம் தீர்மானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வீட்டுக்காவலில் (House Arrest) வைப்பதற்கான புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாநாயக்கக்கார தெரிவித்துள்ளார்.
  • நாராஹேன்பிட்டியில் உள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
  • தற்போது சுமார் 11 இலட்சம் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் 10,500 கைதிகளை மாத்திரமே தங்கவைக்கக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளன.
எழுத்து அளவு:

வீட்டுக்காவலில் (House Arrest) வைப்பதற்கான புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாநாயக்கக்கார தெரிவித்துள்ளார்.

நாராஹேன்பிட்டியில் உள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்:

நீதிமன்றச் செயற்பாடுகளை விரைவுபடுத்துவது எமது அரசாங்கத்தின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். நீதிமன்றங்கள் என்பது நீதிபதிகள் சம்பளம் பெறுவதற்கோ அல்லது சட்டத்தரணிகள் பணம் சம்பாதிப்பதற்கோ உரிய இடங்கள் அல்ல.

மக்களின் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காமல் நீதியைப் பெற்றுக்கொடுப்பதே அதன் நோக்கமாகும். தற்போது சுமார் 11 இலட்சம் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

புதிய பிரதம நீதியரசர் பதவியேற்றதன் பின்னர், வழக்குகள் தேங்குவதை விடவும் அவை நிறைவு செய்யப்படும் வேகம் அதிகரித்துள்ளது.

நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் 10,500 கைதிகளை மாத்திரமே தங்கவைக்கக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளன. எனினும், தற்போது சுமார் 39,000 கைதிகள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 28,000 பேர் இன்னும் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படாதவர்கள் (Remand Prisoners). இதில் 20,000 பேர் போதைப்பொருள் தொடர்பான சந்தேகநபர்களாவர்.

இந்த நெருக்கடியைத் தீர்க்கவே நாம் புதிய சட்டமூலத்தைக் கொண்டுவரவுள்ளோம். இதன் மூலம் சந்தேகநபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, 'எலக்ட்ரானிக்' (Electronic Monitoring) கண்காணிப்பு முறைமையின் கீழ் அவர்களது வீடுகளிலேயே காவலில் வைக்க முடியும். இதன் மூலம் சிறைச்சாலைகளின் நெரிசலை பெருமளவு குறைக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மியான்மார், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சீனா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளிலும் சில மேற்கத்திய நாடுகளிலும் இந்த வீட்டுக்காவல் முறைமை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

இதனை இலங்கைக்குப் பொருத்தமான வகையில் தயாரிப்பதற்காக உச்ச நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட உள்ளிட்ட நிபுணர் குழுவினர் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் வழக்கு விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்படுவதுடன், சில நாடுகளில் உயர்மட்ட அரசியல் தலைவர்களுக்கும் தண்டனையாக இம்முறை பயன்படுத்தப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த புதிய நடைமுறை இலங்கையில் எப்போது அமுலுக்கு வரும் என்பது குறித்த உத்தியோகபூர்வ திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...