Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

வடக்கில் தமிழர்களின் காணிகள் பறிபோகும் அபாயம்!

T

The Leader Desk

ஜனவரி 21, 2026 • 5:37 AM

வடக்கில் தமிழர்களின் காணிகள் பறிபோகும் அபாயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கோடி ரூபாவாக அதிகரிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், இந்த வருடத்திலேயே கிவுல் ஓயா திட்டத்தை ஆரம்பித்து எதிர்வரும் 2031ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யவும் நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
  • எனினும், இது வடக்கில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கிலும் - குடிப்பரம்பலை திட்டமிட்ட முறையில் மாற்றியமைக்கும் நோக்கிலும் கொண்டுவரப்படுகின்றது என்று இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • முன்னதாக, கிவுல் ஓயா அபிவிருத்தி கருத் திட்டத்தை நடைமுறைப்படுத்த கடந்த 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
எழுத்து அளவு:

ஆயிரத்து 345. 6 கோடி ரூபாவாக அதிகரிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வருடத்திலேயே கிவுல் ஓயா திட்டத்தை ஆரம்பித்து எதிர்வரும் 2031ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யவும் நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் குடிதண்ணீர் பற்றாக்குறை, வறுமை, குறை விவசாய உற்பத்தித் திறன் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாகவே கிவுல் ஓயா திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது என்று கூறப்படுகின்றது.

எனினும், இது வடக்கில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கிலும் - குடிப்பரம்பலை திட்டமிட்ட முறையில் மாற்றியமைக்கும் நோக்கிலும் கொண்டுவரப்படுகின்றது என்று இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கிவுல் ஓயா அபிவிருத்தி கருத் திட்டத்தை நடைமுறைப்படுத்த கடந்த 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

அன்றைய மதிப்பில் 417 கோடி ரூபா செலவில் மகாவலி எல் வலயக் கட்டமைப்பின் ஊடாக 4 வருடங்களில் இந்தத் திட்டத்தைப் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி இந்தத் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வடக்கில் தமிழர்களின் காணிகள் பறிபோகும் அபாயம்! | Tamil Leader | We Lead the Nation