பெப்ரவரி 23 க்கு முன்னர் கொவிட் தொற்றுநோயால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதையடுத்து அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிடாவிட்டால், இலங்கையில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஜனாதிபதி செயலகத்தின் முன் பாரிய போராட்டம் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் செய்யும் நாளில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தான் பிரதமர் பெப்ரவரி 23 அன்று இலங்கைக்கு ஒரு குறுகிய இருதரப்பு சந்திப்புக்கு வரவுள்ளார்.

2016 ல் பாகிஸ்தான் நாட்டுத் தலைவர் நாட்டிற்கு விஜயம் செய்ததற்கு பின்னர் எந்த ஒரு பாகிஸ்தான் ஜனாதிபதியும் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை.

இலங்கை முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பாகிஸ்தான் தூதுவரை சந்தித்த போது ​கொரோன தொற்றால் மரணிக்கும் இலங்கை முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதை எதிர்த்து பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு வரும் தினத்தில் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளனர்.

பாக்கிஸ்தான் தற்போது முஸ்லிம் நாடுகள் தொடர்பான அரச தலைவர்களின் உச்சிமாநாட்டின் தலைமை வகிக்கும் நாடாக உள்ளது, மார்ச் மாதம் ஜெனீவாவில் நடக்கவிருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற இலங்கை அரசு ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி