Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

ஆசிரியர்களுக்கான விசேட வழிகாட்டல் கோவை வெளியீடு!

T

The Leader Desk

ஜனவரி 29, 2026 • 6:33 AM

ஆசிரியர்களுக்கான விசேட வழிகாட்டல் கோவை வெளியீடு!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெளியிட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
  • ஆம் ஆண்டின் 50ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
  • மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த நேர்மறையான நம்பிக்கைகளை வழங்குதல்.
  • சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பாக அறிவிப்பதற்கு 1929 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தையும், சிறுவர்களின் மனநலம் குறித்த ஆலோசனைகளுக்கு 1926 என்ற இலக்கத்தையும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

வெளியிட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

1998ஆம் ஆண்டின் 50ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள் மாணவர்கள் தொடர்பாக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என இரண்டு பிரிவுகளின் கீழ் இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை:

மாணவர்கள் பாடசாலை சீருடை, காலணிகள் மற்றும் ஏனைய உபகரணங்கள் இன்றி பாடசாலைக்கு வந்தாலும், அவர்களைப் பாகுபாடின்றி நடத்துதல்.

மாணவர்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்த்தல்.

பாடசாலையை மாணவர்களுக்குப் பாதுகாப்பும் அரவணைப்பும் கிடைக்கக்கூடிய இடமாக மாற்றுதல்.

மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த நேர்மறையான நம்பிக்கைகளை வழங்குதல்.

மாணவர்கள் மீது கருணை மற்றும் புரிதலுடன் (Empathy) செயற்படுதல்.

 

ஆசிரியர்கள் செய்யக்கூடாதவை:

அதிர்ச்சிகரமான சம்பவங்களை மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டாதிருத்தல்.

அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்த மாணவர்களை ஏனையவர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்காதிருத்தல்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்து ஆசிரியர்களின் ஓய்வறையிலோ அல்லது பாடசாலையின் ஏனைய இடங்களிலோ கலந்துரையாடாதிருத்தல்.

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மாணவர்களுக்கு வழங்காதிருத்தல்.

சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பாக அறிவிப்பதற்கு 1929 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தையும், சிறுவர்களின் மனநலம் குறித்த ஆலோசனைகளுக்கு 1926 என்ற இலக்கத்தையும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...