Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

நுவரெலியாவில் இன்று ஆகக் குறைந்த வெப்பநிலை பதிவு!

T

The Leader Desk

ஜனவரி 21, 2026 • 6:20 AM

நுவரெலியாவில் இன்று ஆகக் குறைந்த வெப்பநிலை பதிவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மையத்தினால் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • மேலும்இ பண்டாரவளை பிரதேசத்தில் இன்று அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலையாக 11.5 பாகை செல்சியஸும்இ பதுளை பிரதேசத்தில் 15.2 பாகை செல்சியஸும் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
  • இதேவேளைஇ மஹஇலுப்பல்லம பிரதேசத்தில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 17.4 பாகை செல்சியஸாகக் காணப்பட்டதுடன்இ அனுராதபுரம் பிரதேசத்தில் 18.6 பாகை செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
  • குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் - நவம்பர் 27ஆம் திகதியன்றும் காலையிலிருந்து வழக்கமான மழைதான் பெய்துகொண்டிருந்தது.
எழுத்து அளவு:

மையத்தினால் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும்இ பண்டாரவளை பிரதேசத்தில் இன்று அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலையாக 11.5 பாகை செல்சியஸும்இ பதுளை பிரதேசத்தில் 15.2 பாகை செல்சியஸும் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளைஇ மஹஇலுப்பல்லம பிரதேசத்தில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 17.4 பாகை செல்சியஸாகக் காணப்பட்டதுடன்இ அனுராதபுரம் பிரதேசத்தில் 18.6 பாகை செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டமும் அதிகம் பாதிக்கப்பட்டது. இதில் வெலிமடை - நுவரெலியா பிரதான வீதியில் ரேந்தபொல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மொத்தமாக நான்கு வாகனங்கள் புதைந்ததோடு அவற்றில் சில வாகனங்களை இன்றுவரை மீட்டெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றன.

மண்சரிவில் புதையுண்டு எட்டு பேர் உயிரிழந்ததோடு இவர்களின் உடல்களை நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் சில நாட்களுக்குப் பிறகே மீட்கப்பட்டன. காரணம் மீட்பு பணியின் போது இடையூறு ஏற்படும் வகையில்இ அடிக்கடி மழையும் பெய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது .

குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் - நவம்பர் 27ஆம் திகதியன்றும் காலையிலிருந்து வழக்கமான மழைதான் பெய்துகொண்டிருந்தது. பிற்பகலுக்கு மேல் மழையின் தீவிரம் அதிகமானதும் மாலையில் திடீரென சேறும் சகதியும் கலந்த மண், கற்கள், இராட்சர பாறைகள் உருண்டு வந்தது வீடுகள் முன் மற்றும் வீதியோரங்களில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், வேன், லொறி மற்றும் முச்சக்கரவண்டி என நான்கு வாகனங்களும் வீட்டு உபயோக பொருட்களும் அடித்து செல்லப்பட்டு, மண்ணில் புதைந்தன மேலும் 4 வீடுகள் மண் சரிவில் முழுமையாக சிக்கிக் கொண்டது மேலும் சில வீடுகள் மீது பாறைகளும் விழுந்துள்ளது இன்றுவரை அவற்றை அகற்ற முடியாத நிலையில் உள்ளோம் என தெரிவித்தனர்.

மண்சரிவின் போது உடனடியாக இடம்பெயர்ந்து மக்கள் பாதினாவெல முஸ்லிம் வித்தியாலயம்இ ரேந்தபொல தமிழ் வித்தியாலயம்இ பள்ளிவாசல் மற்றும் அம்பேவல பள்ளிவாசலில் தங்க வைக்கப்பட்டனர். இருந்தும் அவர்களுக்குத் டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கும் வீடுகளை மறுவாழ்வு செய்வதற்கும் அரசாங்கம் வழங்கும் ரூ.25இ000 உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை என்றும் குற்றம் சுமத்துகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தற்சமயம் சீரான காலநிலை காணப்படுகின்ற போது சமீபத்திய மோசமான மழைப்பொழிவு காரணமாக ஏற்கனவே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள பல பகுதிகள் உள்ளன. அவற்றில் அபாயகரமான வெடிப்புக்களும் உள்ளன.

மேலும் இனி வரும் நாட்களில் சிறிதளவு மழை பெய்தாலும்இ அந்தப் பகுதிகள் ஏதோ ஒரு வகையில் சுறுசுறுப்பாக மாறி மீண்டும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் நுவரெலியா பிரதான வீதியில் ரேந்தபொல பகுதியில் சுற்றியுள்ள சூழல் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு பொதுமக்களை வலியுறுத்தி உள்ளது .

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...