இராஜினாமா செய்துள்ளார். தமக்கு வழங்கப்பட்ட கடமைகள் நிறைவடைந்துள்ளதால், ஜனவரி 15ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தான் பதவியிலிருந்து விலகுவதாக அவர் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையை (CEB) பல சுயாதீன நிறுவனங்களாக மறுசீரமைக்கும் திட்டம் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதன் முன்னோடியாகச் செயற்பட்ட மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் புபுது நிரோஷன் ஹடிகல்ல தனது பதவியை ராஜினாமா செய்துள்ளமையானது, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருடன் நிலவும் உள்ளக மோதலின் விளைவாகும் என அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் தலையீட்டின் பேரில் அவரது சேவைக் காலம் நீடிக்கப்பட்ட போதிலும், அவர் எடுத்துள்ள இந்த முடிவின் பின்னணியில் எரிசக்தி அமைச்சர் மற்றும் தற்போதைய நிர்வாகத்தின் சந்தேகத்திற்குரிய நடத்தைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
பணிப்பாளர் நாயகம் ஏன் இராஜினாமா செய்தார்?
புபுது நிரோஷன் ஹடிகல்லவின் ராஜினாமா கடிதத்தின்படி, மறுசீரமைப்புச் செயல்பாட்டில் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் திட்டமிடல் பகுதிகளை (இலங்கை மின்சார சபைக்கு பதிலாக வரும் 6 வாரிசு நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் சொத்துக்களை மாற்றுவதற்கான திட்டங்கள்) அவர் நிறைவு செய்துள்ளார். இப்போது எஞ்சியிருப்பது அமைச்சரினால் "குறிக்கப்பட்ட திகதியை" (Appointed Date) வர்த்தமானி மூலம் அறிவிப்பது மட்டுமே.
ஆனால், அமைச்சர் அந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த தாமதத்தினால் ஒட்டுமொத்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு, பணிப்பாளர் நாயகத்திற்கு அந்தப் பதவியில் மேலும் நீடிப்பதில் அர்த்தமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.


