Tamil Leader News
முக்கியம்
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●
செய்திகள்

நாட்டின் சுகாதாரத் துறை பேரழிவில்

T

The Leader Desk

ஜூலை 19, 2023 • 4:31 AM

நாட்டின் சுகாதாரத் துறை பேரழிவில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அலட்சியத்தால் பல நோயாளிகளின் உயிர்கள் இந்நாட்களில் பலியாக்கப்பட்டதாகவும், இந்நிலைமையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
  • பேராதனை போதனா வைத்தியசாலையிலும், நுவரெலியா வைத்தியசாலையிலும், ராகம போதனா வைத்தியசாலையிலும், கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையிலும், பாணந்துறை ஆதார வைத்தியசாலையிலியிலும்,அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலும், குளியாபிட்டிய வைத்தியசாலையிலும் அதிகளவான உயிர்கள் பலியாகியுள்ளன.
  • பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர், சுகாதார அமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்து கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அலட்சியத்தால் பல நோயாளிகளின் உயிர்கள் இந்நாட்களில் பலியாக்கப்பட்டதாகவும், இந்நிலைமையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர், சுகாதார அமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்து கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாடு முழுவதும் மருத்துவமனைகளிலுள்ள தரம் குறைந்த மருந்துகளை உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும் என்றும், நோயாளிகளின் உயிரைப் பறிக்கும் தரப்பினர் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வங்குரோத்தான இந்நாட்டில் மருந்துப்பொருட்கள் மாபியா செயல்படுவது கேவலமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பேராதனை போதனா வைத்தியசாலையிலும், நுவரெலியா வைத்தியசாலையிலும், ராகம போதனா வைத்தியசாலையிலும், கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையிலும், பாணந்துறை ஆதார வைத்தியசாலையிலியிலும்,அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலும், குளியாபிட்டிய வைத்தியசாலையிலும்  அதிகளவான உயிர்கள் பலியாகியுள்ளன.

இந்தப் பட்டியலைப் பார்க்கும் போது,தரம் குறைந்த மருந்துப் பாவனையினாலும் மருந்துப் பொருட்கள் துறையில் ஏற்பட்டுள்ள மோசடிகளினாலும்,பரிசோதனைகளில் பொருத்தமற்றவை என கண்டறியப்பட்ட மருந்துப் பொருட்களைப் பயன்படுத்தியமையினால் பேரழிவு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சுகாதார அமைச்சரிடமும் அரசாங்கத்திடமும் எதிர்க்கட்சித் தலைவர் பல கேள்விகளை முன்வைத்ததுடன்,இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறும் கோரிக்கை விடுத்தார்.

இதுபோன்ற பிரச்சினைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் அரச அதிகாரிகள் மீது அரசாங்கம் பொய் விசாரணை நடத்துவதாகவும், இதுபோன்ற போலியான விசாரனைகளை நடத்தி சுகாதாரத்துறை அதிகாரிகளின் வாயை அடைப்பதன் மூலம் நாட்டில் 220 இலட்சம் பேரையும் மரண படுக்கைக்கு இட்டுச்செல்லும் சுகாதாரக் கொள்கையைத் தோற்கடிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்தக் கொலைகள் திட்டமிட்ட குற்றங்கள் என்றும், இதற்கு பொறுப்புக் கூற வேண்டிய அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நாட்டின் சுகாதாரத் துறை பேரழிவில் | Tamil Leader | We Lead the Nation