Tamil Leader News
முக்கியம்
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●
செய்திகள்

நாட்டில் எங்கே சட்டம்?

T

The Leader Desk

ஜூலை 17, 2023 • 7:07 AM

நாட்டில் எங்கே சட்டம்?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எனினும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
  • அம்பாறையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (16) இரவு நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
  • மேலும் விமலவீர கருத்தில் தெரிவிக்கையில், கடந்த ஜுலை 10 ஆம் திகதி மாலை 7 மணியளவில் அம்பாறை மாவட்டம் தமண பிரதேச செயலகத்திற்குட்பட்ட பௌத்த விகாரை ஒன்றின் தேரர் ஒருவர் சிலரால் தாக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • தற்போது தாக்குதல் இடம் பெற்று 6 நாட்கள் கடந்தும் கூட பொலிஸாரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எழுத்து அளவு:



எனினும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இத்தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு பொலிஸார் இருக்கின்றனர்.

இதனால் எமது நாட்டின் சட்டம் எங்கே செல்கின்றது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது என முன்னாள் வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (16) இரவு நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் விமலவீர கருத்தில் தெரிவிக்கையில்,

கடந்த ஜுலை 10 ஆம் திகதி மாலை 7 மணியளவில் அம்பாறை மாவட்டம் தமண பிரதேச செயலகத்திற்குட்பட்ட பௌத்த விகாரை ஒன்றின் தேரர் ஒருவர் சிலரால் தாக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தேரர் மீது ஐவர் கொண்ட குழு தாக்குதல் மேற்கொண்டிருந்ததாக அறிய முடிகின்றது. தற்போது தாக்குதல் இடம் பெற்று 6 நாட்கள் கடந்தும் கூட பொலிஸாரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தேரரை தாக்கியவர்கள் என கூறப்படுபவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். இவர்களுக்கு அரசியல் புலம் உள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தேரர் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட இருந்த போராட்டத்தில் பங்கேற்பதற்கு சென்றவர்களுக்கு அறிவுரை கூறியதன் பின்விளைவே தாக்குதல் காரணமாக அமைந்திருக்கின்றது.

பொலிஸார் இவ்விடயத்தில் அமைதியாக உள்ளனர்,

இதில் தமண பொலிஸ் பொறுப்பதிகாரி பொறுப்பு கூற வேண்டியவர். இவர் பாரபட்சமாக உள்ளதாகவே மக்கள் தெரிவித்தனர்.

இத்தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு பொலிஸார் இருக்கின்றனர்.

எமது நாட்டின் சட்டம் எங்கே செல்கின்றது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது. தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் 2 பேரை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. என முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



-அம்பாறை நிருபர் ஷிஹான்-

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...