Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

இலங்கை விமானிகளின்றி பறக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்?

T

The Leader Desk

ஜூலை 15, 2023 • 3:57 PM

இலங்கை விமானிகளின்றி பறக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏர்லைன்ஸ் தொடர்ந்தும் இயக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
  • அந்த விமானிகளை 50% சம்பளத்தில் வைத்துள்ளோம்.
  • கொவிட் காலத்தில், தங்கள் விமானங்கள் செல்லாது என்று கூறி குவைத் ஏர்லைன்ஸின் சுமார் 70 விமானிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்றார்.
  • விமான சேவையின் மறுசீரமைப்பு மற்றும் விமானிகள் வெளியேறுவது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர், “260 விமானிகள் கொண்ட குழு இன்னும் இலங்கையில் தங்கியுள்ளது.
எழுத்து அளவு:

ஏர்லைன்ஸ் தொடர்ந்தும் இயக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மறுசீரமைப்பில், நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளை எடுப்பதற்கு முதலீட்டாளர்களுக்கு முழு உரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

"கொவிட் நெருக்கடி காரணமாக, உலகம் முழுவதும் விமான சேவைகள் தடைப்பட்டன. இதனால், பல விமானங்கள் தரையிலேயே இருந்தன.  ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஸ்ரீலங்கா எயார்லைன்ஸில் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அந்த விமானிகளை 50% சம்பளத்தில் வைத்துள்ளோம். கொவிட் காலத்தில், தங்கள் விமானங்கள் செல்லாது என்று கூறி குவைத் ஏர்லைன்ஸின் சுமார் 70 விமானிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்றார்.

விமான சேவையின் மறுசீரமைப்பு மற்றும் விமானிகள் வெளியேறுவது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர்,

“260 விமானிகள் கொண்ட குழு இன்னும் இலங்கையில் தங்கியுள்ளது. அவர்கள் துபாய் அல்லது சிங்கப்பூர் சென்றால், அவர்களுக்கு பாாியளவான சம்பளம் கிடைக்கும் என எண்ணுகின்றனர். ஆனால் அந்த நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகம். அதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். புதிய விமானிகளுக்கான விண்ணப்பங்களை அழைக்கிறோம். ஆனால் சிலர் இந்த நாட்டில் இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் வெளியேறினால், வெளிநாடுகளில் இருந்து புதிய விமானிகள் பணியமர்த்தப்பட்டு, விமான சேவை தொடரும் என குறிப்பிட்டார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கை விமானிகளின்றி பறக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்? | Tamil Leader | We Lead the Nation