Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

பதவிக்காக உயர் நீதிமன்றம் செல்லும் முஜிபுர்

T

The Leader Desk

ஜூலை 15, 2023 • 10:55 AM

பதவிக்காக உயர் நீதிமன்றம் செல்லும் முஜிபுர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெறும் நோக்கில் நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளார்.
  • இத்தேர்தலில் போட்டியிட முன்வந்த அரச ஊழியர்களுக்கு அவர்களின் வேலை மற்றும் சம்பளத்தை மீள வழங்குவது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
  • தேர்தல் நடத்தப்படாவிட்டால் தமக்கு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என இது குறித்து எமது செய்தி சேவை வினவிய போது அவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெறும் நோக்கில் நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படாவிட்டால் தமக்கு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என இது குறித்து எமது செய்தி சேவை வினவிய போது அவர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்வது குறித்து தனது  சட்டத்தரணியுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாகவும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தேர்தலில் போட்டியிட முன்வந்த அரச ஊழியர்களுக்கு அவர்களின் வேலை மற்றும் சம்பளத்தை மீள வழங்குவது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறாயின் தமக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அது தொடர்பான சிறப்புரிமைகள் வழங்கப்பட வேண்டுமென முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததன் பின்னர், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஏ.எச்.எம்.பௌசிக்கு வழங்கப்பட்டது.

இதேவேளை, மக்களின் வாக்குரிமை தொடர்பில் அரசாங்கம் எவ்வித அக்கறையும் இன்றி செயற்படுவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...