Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

கட்சி பேதமின்றி தேர்தலை நடத்தக் கோரி ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்

T

The Leader Desk

ஜூலை 15, 2023 • 4:29 AM

கட்சி பேதமின்றி தேர்தலை நடத்தக் கோரி ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீதிமன்றத்தின் உதவியை நாடி இதனை சட்ட ரீதியாக தோற்கடிப்பதுடன், எதிர்காலத்தில் தேர்தல் முறைமைக்கு ஏற்படக் கூடிய மரண அடி மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை முறியடிக்க ஒன்றிணைய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (14) தெரிவித்தார்.
  • எதிர்க் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடலொன்று எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்றது.
  • இந்த ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வேலைத் திட்டதை ஆரம்பிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
எழுத்து அளவு:



தற்போதைய அரசாங்கம் பல்வேறு பொய்யான காரணங்களை முன் வைத்து மக்களை அவமதிப்புக் குள்ளாக்கி நடத்த வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைத்துள்ளதாகவும், அரசாங்கம் அவ்வாறு முன் வைக்கும் சகல காரணங்களும் பொய்யான காரணங்கள் என்றும், இது நாட்டு மக்களையும் சகலரையும் ஏமாற்றும் விடயம் என்றும், இந்த ஜனநாயக விரோதச் செயலைத் தொடர அரசாங்கம் மேலும் பல யுக்திகளைப் பயன்படுத்தி வருவதாகவும், வேறு வழிகளில் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளை மீள அழைக்கும் தீவிர ஜனநாயக விரோத நடவடிக்கையில் இந்த அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உறுப்பினர்களான ஜயந்த கெடகொட மற்றும் எதிரிமான்ன ஆகியோரின் முன் மொழிவுகள் ஊடாக இந்த அரசியலமைப்பிற்கு முரணான மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டாலும் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றும் சர்வஜன வாக்கெடுப்பு வெற்றியின் பின்னர் இந்த தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணை சட்டமாக செயற்படுத்தப்பட வேண்டுமென சட்டமா அதிபர் சட்ட வியாக்கியாணம் வழங்கியுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தர் இந்த முயற்சியை முறியடிக்க சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் உதவியை நாடி இதனை சட்ட ரீதியாக தோற்கடிப்பதுடன், எதிர்காலத்தில் தேர்தல் முறைமைக்கு ஏற்படக் கூடிய மரண அடி மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை முறியடிக்க ஒன்றிணைய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (14) தெரிவித்தார்.

எதிர்க் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடலொன்று எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனநாயக கட்டமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், தேர்தலை வெளிப்படைத் தன்மையுடன் சரியான நேரத்தில் நடத்துவது ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம், ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க் கட்சிகள் சகலரினதும் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வேலைத் திட்டதை ஆரம்பிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், தேர்தலை நடத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்திற்குச் சென்ற போது, அரசாங்கத்தின் உறுப்பினர்கள் நீதிமன்ற நீதிபதிகளை பாராளுமன்றத்தின் சிறப்புரிமைக் குழுவின் முன் நிறுத்த முற்பட்டனர்.

என்றும், உயர் நீதிமன்றத்தையும் அதன் நடுநிலையான நீதிபதிகளையும் கூட சங்கடப் படுத்தும் வகையில் அவர்கள் செயல்படுகிறார்கள்.

என்றும், நிறைவேற்று அதிகாரம் கூட நீதித் துறையில் தலையீடு செய்வதாக தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர், கொள்கைகள் எதுவாக இருந்தாலும் இந்த நேரத்தில் தேர்தலை நடத்த ஆளும் எதிர்க் கட்சிகள் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...