Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

யாழ். பொலிஸ் நிலையம் சென்ற பெண் உயிரிழப்பு

T

The Leader Desk

ஜூலை 14, 2023 • 8:25 AM

யாழ். பொலிஸ் நிலையம் சென்ற பெண் உயிரிழப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
  • யாழ்ப்பாணம் 4 ஆம் குறுக்கு தெரு பகுதியில் வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த மல்லாவி துணுக்காய் பகுதியை சேர்ந்த ஜே.
  • தேவரஞ்சன் (வயது 31) எனும் இளைஞன் (12) ஆம் திகதி இரவு தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
  • போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது, பெண்மணி உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
எழுத்து அளவு:

மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் 4 ஆம் குறுக்கு தெரு பகுதியில் வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த மல்லாவி துணுக்காய் பகுதியை சேர்ந்த ஜே. தேவரஞ்சன் (வயது 31) எனும் இளைஞன் (12) ஆம் திகதி இரவு தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார், இளைஞன் தங்கியிருந்த வீட்டின் மற்றுமொரு அறையில் தங்கியிருந்த வயோதிப பெண்மணியை வாக்குமூலம் வழங்க வருமாறு நேற்றைய தினம் (13) யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்திருந்தனர்

அதன் அடிப்படையில் வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிலையம் சென்றிருந்த பெண்மணி, திடீர் சுகவீனமுற்று பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

அதனை அடுத்து நோயாளர் காவு வண்டி மூலம் பெண்மணியை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது, பெண்மணி உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிரேமகுமார் மரண விசாரணைகளை முன்னெடுத்தார்.

அதன் போது, வயோதிப பெண்மணியின் உறவினர்கள் கொழும்பில் வசித்து வருவதாகவும், யாழ்ப்பாணத்தில் தனியாகவே வசித்து வந்ததாகவும், மலர் என அழைக்கப்படும் அவரது வயது 75 என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை உயிர்மாய்த்த இளைஞன், கடந்த சில தினங்களாக மனவிரக்தியில் காணப்பட்டதாகவும், 12 ஆம் திகதி இரவு சத்தி எடுத்தார் எனவும், அவருக்கு தேநீர் ஊற்றி கொடுத்து விட்டு, தூங்க சென்ற பின்னர் இளைஞன் இவ்வாறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பார் என தான் எதிர்பார்க்கவில்லை என வயோதிப பெண்மணி பொலிஸாருக்கு தெரிவித்து, இளைஞனின் உயிர் இழப்பில் கவலையில் இருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.



-யாழ். நிருபர் பிரதீபன்-

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...