Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

அடுத்த தலைமுறைக்கு நல்லிணக்கத்தை விட்டுச் செல்ல வேண்டாம் என முடிவு!

T

The Leader Desk

ஜூலை 12, 2023 • 5:26 PM

அடுத்த தலைமுறைக்கு நல்லிணக்கத்தை விட்டுச் செல்ல வேண்டாம் என முடிவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதனை தற்போது தீர்த்து வைப்பதே ஜனாதிபதி விக்ரமசிங்கவின் நோக்கம் என ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
  • வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ‘உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை’ தொடர்பான சிவில் சமூக விழிப்புணர்வு கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பிலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டிய தேவை வலுவாக உள்ளதாகவும் அந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் நாடு என்ற வகையில் ஒரு வருடத்திற்கு ஜெனிவா கப்பலில் ஏற வேண்டிய அவசியமில்லை எனவும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
எழுத்து அளவு:

அதனை தற்போது தீர்த்து வைப்பதே ஜனாதிபதி விக்ரமசிங்கவின் நோக்கம் என ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பிலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டிய தேவை வலுவாக உள்ளதாகவும் அந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் நாடு என்ற வகையில் ஒரு வருடத்திற்கு ஜெனிவா கப்பலில் ஏற வேண்டிய அவசியமில்லை எனவும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ‘உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை’ தொடர்பான சிவில் சமூக விழிப்புணர்வு கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி "உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையின்" நோக்கங்களை விளக்கினார், மேலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பங்கு பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஆணைக்குழு ஸ்தாபனத்தின் நோக்கங்களை அடைவது தொடர்பில் அங்கு கூடியிருந்த சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்த ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நல்லிணக்க செயற்பாடுகளை வெற்றியடையச் செய்வதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு அனைத்துப் பிரஜைகளின் உடன்பாடும் ஆதரவும் அவசியம் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்தினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...